சி.எஸ்.கே அணியின் பிளானை வச்சே அவங்களை வீழ்த்திய பெங்களூரு. அசத்தல் வெற்றி – என்ன நடந்தது?

Hasaranga Moin Ali
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 (22) ரன்கள் எடுத்த டு பிளேஸிஸ் அவுட்டான நிலையில் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 3 (3) ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

cskvsrcb

- Advertisement -

 

அந்த நிலையில் மறுபுறம் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (33) ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியை மொய்ன் அலி கிளீன் போல்ட்டாக்கி அதிர்ச்சி கொடுத்ததால் 10 ஓவர்களில் 79/3 என பெங்களூரு தடுமாறியது. அந்த இக்கட்டான நிலையில் ஜோடி இளம் வீரர்கள் ரஜத் படிடார் – மஹிபால் லோம்ரோர் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த பெங்களூருவை மீட்டெடுக்க முயற்சித்தனர்.

பெங்களூரு 173:
இருப்பினும் சென்னையின் நல்ல பந்து வீச்சில் பெரிய ரன்களை எடுக்க முடியாத அவர்களில் ரஜத் படிடார் 21 (15) ரன்களும் மஹிபால் லோம்ரோர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 42 (27) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் 150 ரன்களை கடந்த பெங்களூருவுக்கு கடைசி நேரத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (17) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 173/8 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டுகளையும் மொய்ன் அலி 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

- Advertisement -

Mahipal Lomror

அதை தொடர்ந்து 174 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு கடந்த போட்டியில் அசத்திய ருதுராஜ் கைக்கவாட் – டேவோன் கான்வே ஜோடி இம்முறையும் 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு கைகொடுத்த போது 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (23) ரன்கள் எடுத்து ருதுராஜ் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த ராபின் உத்தப்பா 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த சில ஓவர்களில் அம்பத்தி ராயுடுவும் 10 (8) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டியதால் 75/3 என சென்னையும் தடுமாற்றமான தொடக்கத்தை பெற்றது.

சென்னை பரிதாபம்:
அந்த நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே முடிந்த அளவுக்கு போராடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 56 (37) ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் 30 பந்துகளில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்ட போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் சென்னையை காப்பாற்ற போராடிய மொயின் அலியும் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (27) ரன்கள் எடுத்து 18-வது ஓவரில் அவுட்டானது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

- Advertisement -

இறுதியில் 12 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட தோனியும் 2 (3) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 160/8 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்களையும் கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றியால் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மீண்டும் 4-வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ரிவர்ஸ் பிளான்:
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர்களை சரமாரியாக அடித்ததை பார்த்த சென்னையின் கேப்டன் எம்எஸ் தோனி உடனடியாக சுழல் பந்துவீச்சை கொண்டு வந்து கட்டுப்படுத்தினார். குறிப்பாக தீக்சனா, மொய்ன் அலி ஆகியோர் சேர்ந்து 5 விக்கெட்டுகளை எடுத்து ரன்களை தடுத்து நிறுத்தினார். அதை முதல் இன்னிங்சில் கவனித்த பெங்களூரு கேப்டன் டு பிளசிஸ் 2-வது இன்னிங்சில் சென்னை பேட்ஸ்மேன்களும் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து துவைக்க முயற்சித்த போது தனது சுழல் பந்துவீச்சாளர்களை பிரயோகப்படுத்தி விக்கெட்டுகள் எடுத்து ரன்களை தடுத்து நிறுத்தினார்.

RCB Faf Virat

குறிப்பாக மேக்ஸ்வெல், சபாஸ் அஹமட், ஹஸரங்கா ஆகிய சுழல் பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 4 முக்கிய விக்கெட்டுகள் எடுத்தனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் புனே மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்ததை கண்ட சென்னையின் அதே பிளானை வைத்து அவர்களையே பெங்களூரு தோற்கடித்தது. மேலும் அந்த அணி கடைசி ஓவரில் 4 உதிரி ரன்கள் கொடுத்தது தவிர 174 என்ற ரன்களை கட்டுப்படுத்தும் போது 1 எக்ஸ்ட்ரா ரன் கூட வழங்காமல் துல்லியமாகவும் கச்சிதமாகவும் பந்துவீசி வெற்றியை சுவைத்துள்ளது. மறுபுறம் சுழலை எதிர்கொள்ள தவறிய சென்னை 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்துள்ளதால் மும்பையுடன் 2-வது அணியாக லீக் சுற்றுடன் நடையைக் கட்டுவது உறுதியாகிவிட்டது.

Advertisement