டீம் மேனேஜ்மென்ட் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற தவறிய இந்திய வீரர் – என்னங்க ஆச்சி உங்களுக்கு ?

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 70 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய பின்வரிசை இந்திய ஆட்டக்காரர்கள் மீது ரசிகர்கள் சற்று அதிர்ப்தியுடன் இருக்கின்றனர்.

gill

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் நிர்வாகம் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனை போல 5 வேகப்பந்துவீச்சாளர் உடன் களமிறங்காமல் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை நம்பி அணியில் இறக்கியது. ஏனெனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பவுலிங் செய்வது மட்டுமின்றி பேட்டிங்கும் செய்வார்கள் என்கிற காரணத்தினால் பேட்டிங் வரிசையில் வலுப்பெறும் என்பதனால் இப்படி அணித்தேர்வு நடைபெற்றது.

ஆனால் நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து வலுவாக இருந்த இந்திய அணி இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தொடங்கியபோது கோலி மேலும் ரன்களை ஏதும் சேர்க்காமல் 44 ரன்களுக்கு வெளியேறினார். அதனை தொடர்ந்து 28 ரன்களில் இருந்த ரஹானே இன்று மேலும் கொஞ்சம் ரன்களை சேர்த்து 49 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

kohli 1

இந்த இறுதிப் போட்டியில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 4 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் பின்வரிசையில் ஜடேஜா அஸ்வின் ஆகியோர் சற்று நல்ல பாட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் அஸ்வின் 22 ரன்களிலும், ஜடேஜா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் பண்ட், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி இறுதியிலும் ரன் சேர்ப்பார்கள் என்று அனைவரும் நம்பி இருந்தனர்.

Jamieson 2

ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இதனால் அணி நிர்வாகம் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற தவறியதாக தெரிகிறது. இருப்பினும் இந்த மைதானம் நியூசிலாந்து அணிக்கும் பேட்டிங் செய்ய கடினமாகவே உள்ளதால் முதல் இன்னிங்சில் அவர்கள் எவ்வளவு ரன்கள் குவிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement