2024 டி20 உ.கோ : வெளியேறிய ஜிம்பாப்வே.. சரித்திரம் படைத்த உகாண்டா.. மொத்த 20 அணிகள், ஃபார்மட், தேதிகள் அறிவிப்பு

- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக 2024 டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து போன்ற டாப் அணிகள் ஏற்கனவே நேரடியாக தேர்வாகின. எஞ்சிய அணிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வந்த குவாலிபயர் தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

அதில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து போட்டியிட்ட அணிகளில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஜிம்பாப்வே 5 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த அந்த அணி இம்முறை தகுதி சுற்றில் கூட தோல்வியை சந்தித்தது ஜிம்பாப்வே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

20 அணிகள்:
மறுபுறம் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற நமீபியா முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த நிலைமையில் இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் ராவாண்டவை தோற்கடித்த உகாண்டா 5 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு 2வது அணியாக தகுதி பெற்றது. அந்த வகையில் ஐசிசி தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று உகாண்டா புதிய வரலாறு படைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் 20 அணிகளும் உறுதியாகியுள்ளன. அதில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக முதல் 2 அணிகளாக தேர்வானது. அத்துடன் 2022 டி20 உலகக் கோப்பையில் டாப் 8 இடங்களை பிடித்த இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாபிரிக்கா இலங்கை ஆகிய அணிகளும் ஏற்கனவே தேர்வாகியுள்ளன.

- Advertisement -

அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தரவரிசையில் அடுத்த சிறந்த 2 இடத்தில் இருப்பதால் தேர்வாகின. அதன் பின் குவாலிபயர் தொடரின் வாயிலாக ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து நமீபியா, உகாண்டா அமெரிக்க கண்டத்திலிருந்து கனடா ஆசிய கண்டத்திலிருந்து ஓமன் மற்றும் நேபாள் கிழக்கு ஆசியாவிலிருந்து பப்புவா நியூ கினியா ஐரோப்பாவிலிருந்து ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து என மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன.

இதையும் படிங்க: தியாகம் பண்ணியும் அந்த விஷயத்துல என்னால் விராட் கோலி ரேஞ்க்கு வர முடியல.. அஸ்வின் ஓப்பன்டாக்

தேதி, ஃபார்மட்:
இந்த 20 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். அந்த லீக் சுற்றில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் அணிகள் ஃபைனலில் கோப்பையை வெல்வதற்காக மோதும் என்ற அடிப்படையில் இத்தொடரின் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தொடர் 2024 ஜூன் 3இல் துவங்கி 30ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.

Advertisement