கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தினை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் அனைத்து அணிகளுமே பலமாக இருப்பதால் இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியிலும் நட்டு ஆடமாட்டார் :
அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரில் இதுவரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 3.30 மணி அளவில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் வந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் மீண்டும் தங்களது சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்போடு விளையாடும் என்பதனால் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதே வேளையில் இந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இடம் பெற்றிருக்கும் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் விளையாடுவாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவர் காயம் காரணமாக இதுவரை ஒரு லீக் போட்டியில் கூட விளையாடாத நிலையில் நாளைய சிஎஸ்கே போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடராஜனுக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் சிஎஸ்கே அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்றும் முழு உடற்தகுதி பெற்ற பின்னரே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாக குல்தீப் யாதவ் கூறினார்.
இதையும் படிங்க : மும்பை அணியிலிருந்து ஜெய்ஸ்வால் வெளியேற காரணமே அஜிங்க்யா ரஹானே தானாம் – என்ன நடந்தது?
அந்த வகையில் பார்க்கையில் நடராஜன் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதனால் இன்னும் சில போட்டிகள் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. கடைசியாக தமிழ்நாட்டில் நடைபெற்ற டி.என்.பி.எல் தொடரில் விளையாடியிருந்த நடராஜன் அந்த தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பல மாதங்களாகவே எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



