மும்பை அணியிலிருந்து ஜெய்ஸ்வால் வெளியேற காரணமே அஜிங்க்யா ரஹானே தானாம் – என்ன நடந்தது?

Jaiswal and Rahane
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர துவக்க வீரருக்கான இடத்தினை பிடித்துள்ள வேளையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் வெகுவிரைவில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 23 வயதான இளம் வீரரான அவர் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படுவதால் இந்திய அணியும் அவருக்கு பெரிய அளவில் ஆதரவினை வழங்கி தொடர்ச்சியாக அணியில் தேர்வு செய்து வருகிறது.

ஜெய்ஸ்வாலின் வெளியேற்றத்திற்கு காரணம் ரஹானேவா? :

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் அவர் மற்ற நேரங்களில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலேயே தேசிய அணிக்கு தேர்வான அவர் தற்போது மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணியில் விளையாட மும்பை மாநில கிரிக்கெட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும் மும்பை அணியில் இருந்து இடம்பெயற இருக்கும் அவர் கோவா அணிக்காக கேப்டனாக விளையாட இருக்கிறார் என்ற தகவல்களும் பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை அணியில் விளையாடி வந்த அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லாட் ஆகியோர் கோவா அணிக்கு இடம்பெயர்ந்துள்ள வேளையில் தற்போது மூன்றாவது வீரராக மும்பை அணியிலிருந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்கு செல்கிறார். இந்நிலையில் கோவா அணிக்காக தான் விளையாடுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால் கூறுகையில் :

நான் மும்பை அணியில் இருந்து தான் இந்திய அணிக்கு தேர்வாகினேன். அதனால் எப்பொழுதுமே மும்பை அணியின் மீது எனக்கு ஒரு மிகப்பெரிய மரியாதை உள்ளது. இன்று நான் இருக்கும் இந்த நிலைக்கு மும்பை அணி தான் மிக முக்கியமான காரணம். ஆனாலும் கோவா அணி எனக்கு கேப்டன் பதவி வழங்குவதாலே நான் அங்கு செல்கிறேன். இந்திய அணிக்காக விளையாடும் நேரத்தினை தவிர்த்து உள்ளூர் போட்டிகளில் கோவா அணிக்காக விளையாடி அந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என்று ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனாலும் ஜெய்ஸ்வால் இப்படி மும்பை அணியிலிருந்து கோவா அணிக்கு செல்ல தனிப்பட்ட முறையில் மும்பை கேப்டன் அஜின்க்யா ரஹானேவுடன் ஏற்பட்ட மோதல்தான் என்ற சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஏனெனில் ஏற்கனவே உள்ளூர் தொடரின் போது ஒரு போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை களத்தில் இருந்து கேப்டன் ரஹானே சிறிது நேரம் வெளியேற்றி ஓய்வறையில் அமர வைத்திருந்தார். அது அப்போதே பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது.

இதையும் படிங்க : எம்.எஸ் தோனி எனக்கு ஒரு அப்பா மாதிரி மட்டுமில்ல.. கடவுள் மாதிரி – மதீஷா பதிரானா நெகிழ்ச்சி

அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற ஒரு உள்ளூர் தொடரின் போது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து ஓய்வறைக்கு திரும்பியதும் ரகானே கிட் பேக்கை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய மோதலும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஜெய்ஸ்வால் மும்பை அணியில் இருந்து வெளியேறி கோவா அணிக்காக விளையாட இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement