ஐ.பி.எல் தொடரில் கிடைச்ச பணத்தால தான் அவருக்கும் எனக்கும் பிரன்ட்ஸ்ஷிப்பே போச்சு – சைமண்ட்ஸ் ஓபன்டாக்

Symonds
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மிகச் சிறந்த ஒரு வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிகளிலும் பலமுறை இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களில் பல தவறான விடயங்கள் இருந்துள்ளதை நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம்.

symonds

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் “கிளார்க் ஆஷஸ் டைரி 15” என்று ஒரு புத்தகம் வெளியிடுகையில் : அந்த புத்தகத்தில் அவருடன் விளையாடிய பல முன்னாள் வீரர்களை விமர்சித்திருந்தார். அந்த வகையில் ஆண்ட்ரு சைமன்ஸ் குறித்தும் அவர் அந்த புத்தகத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

அணிக்கு பெரிதாக எதுவும் சாதிக்காமல் குடித்துவிட்டு கும்மாளம் போட்டவர் சைமண்ட்ஸ் என்றும் அவர் ஒரு தரம் தாழ்ந்த வீரர், அவர் மற்றொரு வீரரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர் என வார்த்தைகளால் பயங்கரமாக தாக்கி இருந்தார். இதன் காரணமாக அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

clarke

அதோடு அவர்கள் இருவரது நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் குறித்து சைமண்ட்ஸ் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டதாவது : ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு தொடரில் நான் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாட 5 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் நான்தான்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடர் துவங்கிய போதே மேத்யூ ஹைடன் என்னிடம் வந்து உனக்கு நிறைய தொகை கிடைத்துள்ளது. இதன் காரணமாக மைக்கல் கிளார்க்க்கு உன் மேல் கொஞ்சம் பொறாமை ஏற்பட்டுள்ளது என்று என்னிடம் சுட்டிக்காட்டினார். பணம் பல வேடிக்கையான விஷயங்களை செய்து இருக்கிறது.

இதையும் படிங்க : தல தலதான் ! 40 வயதிலும் விராட், ரோஹித் என அனைவரையும் தாண்டி தல தோனி முதலிடம் – முழுவிவரம் இதோ

அந்த வகையில் எனக்கும் கிளார்க்கும் இடையே உள்ள நட்பில் விஷத்தை இந்த பணம்தான் உண்டாக்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் மீது எனக்கு தற்போதும் மரியாதை இருக்கிறது. ஆனால் நாங்கள் இருவரும் தற்போது நட்பில் இல்லை. இங்கே உட்கார்ந்து கொண்டு அவரை நான் அசிங்கப்படுத்த போவது கிடையாது என்று சைமண்ட்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement