தல தலதான் ! 40 வயதிலும் விராட், ரோஹித் என அனைவரையும் தாண்டி தல தோனி முதலிடம் – முழுவிவரம் இதோ

- Advertisement -

எதிர்பாரா திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே ஐபிஎல் என்றால் ஒவ்வொரு போட்டியிலும் பல எதிர்பாராத திருப்பங்கள் அமைவதாலேயே இந்த அளவுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால் இந்த வருடம் ரசிகர்கள் எதிர்பாராத மிகப் பெரிய ட்விஸ்ட் ஆரம்பம் முதலே நிகழ்ந்து வருகிறது. ஆம் இந்த தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத், லக்னோ ஆகிய அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் வெற்றி நடைபோட்டு வருகின்றன.

cskvsmi

ஆனால் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த சென்னையும் மும்பையும் அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடுகின்றன. இதனால் இவ்விரு அணிகளும் இந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

- Advertisement -

சொதப்பும் ரோஹித் – விராட்:
அதைவிட தற்போதைய தேதியில் இந்தியாவின் டாப் 2 நட்சத்திர வீரர்களாக இருக்கும் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்த தொடரில் ரன்கள் எடுக்க முடியாமல் திணறுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. அதிலும் இந்தியாவின் இந்நாள் மற்றும் முன்னாள் கேப்டன்களாக வலம் வரும் இவர்கள் கடைசி சில போட்டிகளில் டக் அவுட்டாகி நாங்கள் மோசமான பார்மில் இருக்கிறோம் என்று காட்டியுள்ளனர்.

Rohit

இதில் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா 7 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் 114 ரன்களை 16.29 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ள விராட் கோலி இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 119 ரன்களை 17.00 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காத இவர் வரலாற்றிலேயே முதல் முறையாக கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாகி பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

- Advertisement -

40 வயதில் கலக்கும் தோனி:
அவரைகளை போலவே கடந்த சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்ற இந்தியாவின் நட்சத்திர கேப்டன் மற்றும் ஜாம்பவான் எம்எஸ் தோனியும் கடந்த 2020, 2021 ஆகிய வருடங்களில் அவர்களை விட படு மோசமான பார்மில் திண்டாடி வந்தார். அதில் 2020இல் 14 போட்டிகளில் 200 ரன்கள் எடுத்த அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில் 2021 ஆண்டில் அதைவிட மோசமாக 16 போட்டிகளில் வெறும் 114 ரன்களை 16.28 சராசரியில் மட்டுமே எடுத்தார். மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத காரணத்தாலும் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தாலும் 2019 வரை “பினிஷர் என்று அழைக்கப்பட்ட அவரை முடிந்துபோன பினிஷர்” என்று நிறைய பேர் கேலி செய்தனர்.

MS Dhoni vs MI

இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே 86/5 என சென்னை தடுமாறிய வேளையில் அதிரடியாக பேட்டிங் செய்து 50* (38) ரன்களுடன் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தாம் இன்னும் முடிந்து போகவில்லை என ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அதைவிட மும்பைக்கு எதிரான சென்னையின் 7-வது லீக் போட்டியில் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் 28* (13) ரன்களை விளாசி தனி ஒருவனை போல தனது அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

தல தலதான்:
மிகப்பெரிய பரபரப்பு நிலவிய அந்த இக்கட்டான சூழ்நிலையில் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதைப் போல மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னை மீண்டும் எப்போதுமே ஒரு மிகச்சிறந்த ஃபினிஷர் என்று நிரூபித்தார். அந்த வகையில் இதுவரை பங்கேற்ற 6 இன்னிங்ஸ்களில் 120* ரன்களை குவித்துள்ள அவர் விராட் கோலி (119) ரோகித் சர்மா (114) ஆகியோரை விட அதிக ரன்களை குவித்து 40 வயதிலும் அட்டகாசமான பேட்டிங் செய்து வருகிறார்.

rcbvscsk

அதைவிட தற்போதைய நிலைமையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட பேட்ஸ்மேன்களின் ஆல் டைம் பட்டியலில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் நட்சத்திரங்களை காட்டிலும் எம்எஸ் தோனி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. எம்எஸ் தோனி : 39.88
2. விராட் கோலி: 36.79
3. ரிஷப் பண்ட் : 35.22
4. சச்சின் டெண்டுல்கர் : 34.83
5. ஷிகர் தவான் : 34.67

இதையும் படிங்க : BDay Special : டி20 கிரிக்கெட்லயும் சச்சின் வச்சிருக்க இந்த சாதனை பற்றி தெரியுமா? – கிரிக்கெட்டின் கடவுள்

எனவே சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என நிரூபித்துள்ள எம்எஸ் தோனியை போல அவரின் சிஷ்யர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது தவித்து வரும் இந்த மோசமான பார்மில் இருந்து விரைவில் மீண்டெழுந்து ரன் மழை பொழிவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement