BDay Special : டி20 கிரிக்கெட்லயும் சச்சின் வச்சிருக்க இந்த சாதனை பற்றி தெரியுமா? – கிரிக்கெட்டின் கடவுள்

sachin
- Advertisement -

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் மத்தியில் கிரிக்கெட்டின் கடவுளாகவும் பார்க்கப்படுபவர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகள் இல்லை என்று கூறும் அளவிற்கு ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது இந்த பிறந்த நாளுக்கு உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sachin

- Advertisement -

உலகெங்கிலும் இருந்து சமூக வலைதளம் மூலமாக தற்போது சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் அவர் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படிப்பட்ட வீரர் என்பது குறித்து நாம் அனைவரும் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லை.

அந்த அளவிற்கு அவர் ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். அந்த வகையில் சச்சின் டி20 கிரிக்கெட்டில் வைத்துள்ள சாதனையை அவரது பிறந்தநாள் சிறப்பு பதிவாக நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

Sachin-Tendulkar-with-his-wife-and-children

அதன்படி ஐபிஎல் வரலாற்றில் இன்று எத்தனையோ வீரர்கள் வந்து விளையாடி வருகிறார்கள். அதேபோன்று இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தொடர்ந்து விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்களில் முதல் முதலாக குறைந்த போட்டிகளில் ஐ.பி.எல் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தற்போது வரை சச்சின் டெண்டுல்கர் தான் வைத்துள்ளார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

- Advertisement -

நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. ஆம், கடந்த 2010ஆம் ஆண்டு அவர் தான் விளையாடிய 31-வது போட்டியிலேயே 1064 ரன்களை குவித்து குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

இதையும் படிங்க : 2008 ல இருந்து வெயிட் பண்றேன். ஆனா இதுவரை நடக்கல – தனது நிறைவேற ஆசை குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்

இன்றளவும் இந்த பட்டியலில் சச்சின்தான் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்களை அடித்த இந்திய வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்வீரர்களே ஐ.பி.எல் தொடரில் பல சாதனைகளை படைப்பார்கள் என்பதற்கு விதிவிலக்காக சச்சின் டி20 கிரிக்கெட்டிலும் தனது சாதனையை படைத்திவிட்டு தான் வெளியேறியுள்ளார்.

Advertisement