2008 ல இருந்து வெயிட் பண்றேன். ஆனா இதுவரை நடக்கல – தனது நிறைவேற ஆசை குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி தொடரானது முடிவடைந்த வேளையில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோன்று கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியிலிருந்து பார்ம் அவுட் காரணமாக ஒதுக்கப்பட்ட வீரர்களும் தங்களது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் வீரரும், இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

karthik

- Advertisement -

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் கார்த்திக் ஒவ்வொரு போட்டியையும் வெற்றிகரமாக பினிஷிங் செய்து கொடுத்தும் வருகிறார். போட்டிக்கு போட்டி தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் ஸ்கில் இன்னும் பன்மடங்காக வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலத்திலிருந்தே சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை தொடர்ச்சியாக தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இதுநாள் வரை அவருக்கு சிஎஸ்கே அணியில் விளையாடும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது :

Karthik

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப் போகிறது என்று தெரிந்த போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். மேலும் அந்த தொடருக்கான ஏலம் நடைபெறும் போது தமிழ்நாட்டின் தற்போதைய மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் நான்தான். எனவே என்னை நிச்சயம் சிஎஸ்கே அணியில் தேர்வு செய்வார்கள் என்று ஒரு முக்கியமான நிர்வாகி என்னிடம் கூறியிருந்தார். ஆனால் அந்த ஆண்டு நான் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்படவில்லை.

- Advertisement -

ஒருவேளை நான் ஒரு வீரராக மட்டும் கூட சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டு இருந்தால் நிச்சயம் எனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மாறி இருப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் என்னை சிஎஸ்கே அணி வாங்கவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது 13 ஆண்டுகளாக நான் சென்னை அணிக்காக விளையாட காத்திருக்கிறேன். ஆனால் இதுவரை சிஎஸ்கே விடம் இருந்து எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடப்போகும் முதல் தொடர். யாருடன் தெரியுமா? – முழு அட்டவணை இதோ

சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது மட்டும் எனது ஆசை இல்லை. அந்த அணிக்கு கேப்டனாகவும் இருக்க வேண்டும் என தனது நிறைவேறாத ஆசை குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருந்தார். தற்போது 36 வயதாகும் தினேஷ் கார்த்திக் அடுத்த சில ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக விளையாடுவார் என்பதனால் நிச்சயம் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.

Advertisement