ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடப்போகும் முதல் தொடர். யாருடன் தெரியுமா? – முழு அட்டவணை இதோ

Indian Team
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மும்பை நகரில் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான 4-வது வாரத்தைக் கடந்து மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை சென்று ரசிகர்களுக்கு பரபரப்பான தருணங்களை விருந்தாக படைத்தது. இதில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

IPL

- Advertisement -

தற்போது மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் 25 – 50% ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகள் கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் வரும் மே 29-ஆம் தேதியுடன் 65 நாட்களுக்கு பின் 74 போட்டிகளில் ரசிகர்களை மகிழ்வித்த பின் 15-வது ஐபிஎல் தொடர் நிறைவு பெறவுள்ளது.

தென்ஆப்பிரிக்க தொடர்:
இந்த பரபரப்பான ஐபிஎல் தொடரில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா என அனைத்து இந்திய வீரர்களும் அந்தந்த அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். இந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடர் முடிந்தவுடன் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

INDvsRSA

அதன்படி ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் இந்தியாவிற்கு வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாடும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- Advertisement -

முழு அட்டவணை:
அந்த அறிவிப்பின்படி வரும் மே 29-ஆம் தேதி நிறைவடையும் ஐபிஎல் தொடருக்கு பின் 10 நாட்கள் மட்டுமே ஓய்வெடுக்க உள்ள இந்திய வீரர்கள் வரும் ஜூன் 9-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றனர். அந்த வகையில் இந்த டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியில் துவங்கி வரும் ஜூன் 19-ஆம் தேதியுடன் பெங்களூருவில் நிறைவடைகிறது.

INDvsRSA

இந்தியா – தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான முழு அட்டவணை இதோ:
ஜூன் 9, இரவு 7 மணி, முதல் டி20, டெல்லி
ஜூன் 12, இரவு 7 மணி, 2-வது டி20, கட்டாக்
ஜூன் 14, இரவு 7 மணி, 3-வது டி20, விசாகப்பட்டினம்
ஜூன் 17, இரவு 7 மணி, 4-வது டி20, ராஜ்கோட்
ஜூன் 19, இரவு 7 மணி, 5-வது டி20, பெங்களூரு

- Advertisement -

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:
இதற்கான இந்திய அணி வரும் வாரங்களில் அறிவிக்கபட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தொடரில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக தரமான வீரர்களுக்கு வாய்ப்பளித்து சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு புதிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முழு திறமையை வெளிப்படுத்தும் இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dinesh Karthi 66

அதேபோல் பெங்களூர் அணிக்காக மிரட்டலாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷராக செயல்பட்டு எதிரணிகளைப் பந்தாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை பெற்று கொடுத்தபின் இந்தியாவிற்காக டி20 உலக கோப்பையில் விளையாடுவதே இலட்சியம் என தெரிவித்து வரும் அவருக்கு இந்த தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என நம்பப்படுகிறது.

- Advertisement -

இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சமீபத்தில் பார்ம் இல்லாமல் தவித்தாலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவ், கடந்த உலக கோப்பையில் காயத்தால் விலகிய தமிழக வீரர் நடராஜன் போன்றவர்களுக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 பிளே ஆஃப் சுற்று மைதானம், மகளிர் ஐபிஎல் பற்றி கங்குலி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

அதேசமயம் தொடர்ச்சியாக விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சில வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

Advertisement