இந்திய துணைக்கண்டத்தில் பவுலிங்கில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை – இந்திய வீரரை புகழ்ந்த ஸ்வான்

Swann
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது கடந்த வாரம் துவங்கி தொடங்கி நடந்து வருகிறது.

Swann

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரீம் ஸ்வான் இந்திய வீரர்கள் குறித்து தனது கருத்தினை அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஸ்பின் பவுலர் களிலேயே இந்திய துணைக்கண்டத்தில் சிறப்பான ஆப் ஸ்பின்னர் அஸ்வின் தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மைதானங்களை பொறுத்தவரை தலைசிறந்த ஆப் ஸ்பின்னர் அஸ்வின் மட்டுமே ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் ஒரு சில போட்டிகளில் நன்கு செயல்பட்டு இருந்தாலும் அவரால் அஸ்வினுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

Ashwin

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள அஷ்வின் இந்தியத் துணைக்கண்டத்தில் அனைத்து அணிகளின் வீரர்களையும் வதைத்து எடுத்துள்ளார். மேலும் இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு என இரண்டிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் திணறுகின்றனர். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது டி20 போட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ashwin

2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அஸ்வின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு லிமிடெட் ஓவர் அணிகளில் இடம் கிடைக்கவில்லை இருப்பினும் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் மேலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement