- Advertisement -
ஆசிய கோப்பை

டி20 போட்டிகளில் இதை நான் தொடர்ந்து செய்யனும்.. அதுதான் என்னோட ஆசை – சூரியகுமார் யாதவ் பேட்டி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ஆறாவது லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு ஏற்கனவே இந்த தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியிருந்த இந்திய அணி தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியதால் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பும் உறுதியாகியுள்ளது.

டி20 போட்டிகளில் இதுதான் என்னோட ஆசை : சூரியகுமார் யாதவ்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அவரது பிறந்தநாள் அன்று இந்திய அணியை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தான் டி20 போட்டிகளில் சேசிங்கின் போது ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லவே விரும்புவதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் சில கருத்துக்களை போட்டி முடிந்து பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த வெற்றி என்னுடைய பிறந்தநாள் பரிசாக வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எப்பொழுதுமே நான் சேசிங்கின் போது பேட்டிங்கில் இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்று விரும்புவேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் இறுதிவரை நின்று விளையாடியதில் மகிழ்ச்சி. இனியும் நான் டி20 போட்டிகளில் சேசிங்கின் போது இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாட வேண்டும் என்கிற விருப்பமும் இருக்கிறது. மைதானத்திற்கு வரும்போது எந்த அணியாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நல்ல முறையில் தயாராகி வந்து விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : அப்பாடா ஒரு வழியா அடுத்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடப்போறது கன்பார்ம் – பும்ராவால் ஏற்படவுள்ள மாற்றம்

அந்த வகையில் நான் ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக மிகச் சிறப்பாக தயாராகிறேன் என்றும் சூரியகுமார் யாதவ் கூறினார். இந்தியா அணி அடுத்ததாக தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபி மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அந்த போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி இப்போதே உறுதி என்று கூறலாம்.

- Advertisement -