- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பவுலர்களுக்கு இந்த சவால் இருக்கனும்.. அதனால் தான் அந்த முடிவை எடுத்தேன்.. வெற்றிக்கு பிறகு – கேப்டன் பேட்டி

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியானது நேற்று பிப்ரவரி 18-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

நெதர்லாந்து அணியை வீழ்த்திய பிறகு பேசிய : சூரியகுமார் யாதவ்

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 66 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களையும் அடித்தனர். பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நெதர்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் அடுத்ததாக பந்துவீச்சில் எவ்வாறு செயல்படப்போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போல மைதானத்தில் பனிப்பொழிவும் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : உங்களால் என் மானமே போச்சு.. இந்திய பிரண்ட்ஸ் என்னை கலாய்க்குறாங்க – ரிக்கி பாண்டிங் பகிர்வு

இந்த தொடரில் இனிவரும் போட்டிகளிலும் டியூ ஒரு முக்கிய ஃபேக்டராக இருக்கலாம் எனவே இதனை எவ்வாறு நமது பந்துவீச்சாளர்கள் கையாளுகிறார்கள்? என்பதை சவாலாக கொண்டே நான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தேன். அதன்படியே நமது பந்துவீச்சாளர்களும் இன்று சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இனிவரும் போட்டிகளிலும் நம்முடைய சிறப்பான ஆட்டம் தொடரும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -