கடைசி ஓவர் வரை வந்து நாங்க தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது பெங்களூரு அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது.

ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய : சூரியகுமார் யாதவ்

பின்னர் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணியானது சரியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக போட்டியின் கடைசி ஓவரில் ஆர்.சி.பி அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : இந்த போட்டியின் கடைசி ஓவரை ராஜ் பாவாவிற்கு வழங்கியதற்கு காரணம் யாதெனில் அவர் இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக தயாராகி வந்தார்.

அதோடு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆல் ரவுண்டராக அற்புதமாக தயாராகிய அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க நினைத்து இந்த வாய்ப்பை வழங்கினோம். அவரும் கிட்டத்தட்ட இந்த போட்டியில் சிறப்பாக கடைசி வரை வீசினார். இருந்தாலும் போட்டி எங்களுக்கு சாதகமாக முடியவில்லை. இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்ததாக நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே ஆளா நின்னு எங்களை ஜெயிக்க வச்சிருக்காரு.. மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் – பட்டிதார் ஹேப்பி

தவறான நேரத்தில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய நன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் போனது. இருந்தாலும் நமன் தீர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதேபோன்று இரண்டாம் பாதியில் பெங்களூரு அணியின் வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என் சூரியகுமார் யாதவ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement