ஒரே ஆளா நின்னு எங்களை ஜெயிக்க வச்சிருக்காரு.. மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் – பட்டிதார் ஹேப்பி

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 54-வது லீக் போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : ரஜத் பட்டிதார் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது. பின்னர் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்று முடிவடைந்துள்ளது. முடிவில் நாங்கள் ஒரு மிகச் சிறப்பான ஆட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். க்ருனால் பாண்டியா இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி எங்களது அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவரை ஐந்தாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று எடுத்த முடிவு அணியின் ஒட்டுமொத்த முடிவாக இருந்தது. ஏனெனில் ஏற்கனவே அவர் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி விளையாடிய அனுபவம் உள்ளவர். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட க்ருனால் பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடினார். பெரிய முக்கியமான சூழ்நிலையில் அவர் விளையாடிய இந்த ஆட்டம் எங்களை மீட்டெடுத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு எதிரா நாங்க இப்படி மோசமாக தோக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் பேட்டி

புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணியின் வீரர்களை கட்டுப்படுத்தினார். இந்த மைதானத்தில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இனிவரும் போட்டியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement