சி.எஸ்.கே அணிக்கு எதிரா நாங்க இப்படி மோசமாக தோக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh Pant
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது சி.எஸ்.கே அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.

சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : ரிஷப் பண்ட் பேட்டி

அதனை தொடர்ந்து விளையாடிய சென்னை அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 208 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி சி.எஸ்.கே அணியின் பிளே ஆப் வாய்ப்பையும் உயிர்ப்புடன் மாற்றியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியும் தோல்வியை சந்தித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது :

- Advertisement -

உண்மையிலேயே இந்த போட்டி அற்புதமான ஒரு போட்டியாக இருந்தது. எல்லா விடயங்களும் நன்றாக வந்தும் எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம். இதுபோன்ற போட்டிகளில் பவர்பிளேவின் போது நாம் எதிர் அணிகளை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். ஆனால் நிறைய கேட்ச்களை நாங்கள் தவறவிட்டதாலும், பந்துவீச்சில் சில சில தவறுகளை செய்ததாலும் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக ரன் சேர்த்தனர்.

அதிலும் குறிப்பாக உர்வில் படேல் நம்ப முடியாத அளவு மிகச் சிறப்பான ஆட்டத்தை பவர்பிளே ஓவர்களில் வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் இந்த போட்டியின் முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாகவும் மாறியுள்ளது. சி.எஸ்.கே அணியின் வீரர்கள் அற்புதமாக விளையாடியிருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்து வெற்றி பெற்றது குறித்து பேசிய – ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி

நாங்கள் இன்னும் நிறைய இடங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த போட்டியை பொருத்தவரை 200 முதல் 210 வரை நல்ல இலக்கு தான் என்று நினைத்தோம். ஆனாலும் பவர்பிளேவின் போது சி.எஸ்.கே சிறப்பாக செயல்பட்ட விளையாடியதால் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement