200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்து வெற்றி பெற்றது குறித்து பேசிய – ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி

Ruturaj Gaikwad
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

லக்னோ அணிக்கெதிரான வெற்றி குறித்து பேசிய : ருதுராஜ் கெய்க்வாட்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது :

- Advertisement -

200 ரன்களை சேசிங் செய்யும் போது போட்டியின் ஆரம்பத்தை அதிரடியாக துவங்க வேண்டியது அவசியம். எப்படி நாம் சேசிங் செய்தாலும் இதுபோன்ற போட்டிகள் 20-வது ஓவர் வரை நிச்சயம் செல்லும். இந்த போட்டியின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தோம். அதுதான் இலக்கை வெற்றிகரமாக துரத்துவதற்கு காரணமாகவும் மாறியது.

200 ரன்களை சேசிங் செய்யும் போது நிச்சயம் அழுத்தம் இருக்கும். அதனை சமாளித்து நாங்கள் மிகச் சிறப்பான வெற்றியை ருசித்துள்ளோம். இந்த போட்டியில் லக்னோ அணியின் சார்பாக ஜாஷ் இங்கிலீஷ் மிகச்சிறப்பாக விளையாடி அவர்களது ரன் குவிப்பை அதிகப்படுத்தினார். அப்போது சஞ்சு சாம்சன் என்னிடம் வந்து எவ்வளவு குறைவாக அவர்களை நிறுத்துகிறோமோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது என்று கூறினார். அந்த வகையிலே எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களது ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினர்.

- Advertisement -

இதையும் படிங்க : மஹேந்திர சிங் தோனியின் சாதனையை ஜோடியாக சமன் செய்த ரோஹித் மற்றும் விராட் – விவரம் இதோ

நிச்சயம் இன்னும் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக சென்றிருந்தால் இன்னும் போட்டி கடுமையாக மாறியிருக்கும். எங்களது பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே லக்னோ அணியை 200 ரன்களில் நிறுத்தி மீண்டும் நாங்கள் அதனை சேசிங் செய்து வெற்றிபெற முடிந்தது என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement