- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய டி20 அணி இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்க காரணமே இதுதான்.. சூரியகுமார் யாதவ் – பகிர்ந்த தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறவே இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே பெற்று வந்தது.

இந்திய அணி இவ்வளவு பலமாக இருக்க இதுவே காரணம் : சூரியகுமார் யாதவ்

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிக சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருந்தது. அதனை தவிர்த்து மற்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 2026 டி20 உலககோப்பை தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் இதுவரை எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காத கேப்டன் என்ற பெருமையும் சூரியகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணி இப்படி அசைக்க முடியாமல் ஆதிக்கம் செலுத்துவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து சில கருத்துக்களை சூர்யகுமார் யாதவ் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நம்முடைய டி20 கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத ஆதிக்கத்திற்கு காரணம் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் போன்றவை தான். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் மூலமாகவும், உள்ளூர் கிரிக்கெட் மூலமாகவும் பல வீரர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களது திறமையையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல திறமையான வீரர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நம்முடைய அணியும் பலமாக மாறி வருகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை தற்போது நம்மால் எத்தனை அணிகளை வேண்டும் என்றாலும் உருவாக்க முடியும். குறிப்பாக நம்மால் ஒரே நேரத்தில் மூன்று டி20 இந்திய அணியை உருவாக்கும் அளவிற்கு நம்முடைய வீரர்களின் பலம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜிதேஷ் சர்மாவை தாண்டி இஷான் கிஷனை டி20 உலககோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? – கேப்டன் விளக்கம்

இந்திய அணியின் பலத்திற்கு காரணமே நம்முடைய அடித்தளம் வலுவாக இருப்பது தான். உள்நாட்டு தொடர் மற்றும் ஐபிஎல் என முக்கிய தொடர்களின் மூலம் இளம் வீரர்கள் சர்வதேச அனுபவத்தை பெறுகின்றனர். அதன் காரணமாகவே நம்மால் இவ்வளவு பலமான அணியாக திகழ முடிகிறது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -