தினேஷ் கார்த்திக் 4 ஆம் இடத்தில் களமிறங்கியதன் காரணம் இதுதான் – தொடர்நாயகன் சூரியகுமார் யாதவ் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்று இந்த டி20 தொடரின் கடைசி டி20 போட்டியானது இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கு என்பதனால் இந்திய அணி துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த வேளையில் ரோகித் சர்மா போட்டியின் இரண்டாவது பந்தியிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் மூன்றாவது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்ததால் சூர்யா குமார் யாதவ் வந்து அதிரடி காட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நான்காவது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த துவக்க வீரர் ரிஷப் பண்ட் சிறிது நேரம் அதிரடி காட்ட 14 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 2 பவுண்டரி என 27 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் ஐந்தாவது வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 8 ரன்கள் மட்டுமே குவித்தார். தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 21 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 46 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இந்திய வீரர்கள் கணிசமாக ரன் குவித்து வந்தாலும் இறுதியில் 18.3 ஓவர்களில் 178 ரன்களை மட்டுமே குவித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தனர்.

Dinesh Karthik

இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சூரியகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் போட்டி முடிந்து இந்த தொடர் நாயகன் விருது குறித்து பேசிய அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில் : நான் எப்பொழுதுமே புள்ளி விவரங்களை பற்றி யோசிப்பதே கிடையாது. போட்டிக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டுமே தான் யோசிப்பேன். ஆனால் எனது நண்பர்கள் எனக்கு வாட்ஸ் அப் மூலம் என்னுடைய புள்ளி விவரங்களையும், சாதனைகளையும் அனுப்புவார்கள். ஆனால் அதை எல்லாம் நான் பெருசாக எடுத்துக் கொள்வதில்லை.

- Advertisement -

என்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறேன். நான் எவ்வாறு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேனோ அதனை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். இன்றைய போட்டியில் நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது முடியாமல் போனது. இந்த போட்டியில் எனக்கு முன்னால் தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்தில் களமிறங்க காரணம் யாதெனில் : அவருக்கு இன்னும் பேட்டிங் செய்ய நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தோம்.

இதையும் படிங்க : எல்லாம் ஓகே தான். ஆனா சூரியகுமார் யாதவை நெனச்சா தான் – தோல்விக்கு பிறகு பேசிய ரோஹித் காமெடி

அதன்படி அவர் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும் என்பதனாலே அவருக்கு விளையாட ஒரு வாய்ப்பாக இந்த பிரமோஷன் வழங்கப்பட்டது. அவரும் நான்காவது இடத்தில் பிரமாதமாக விளையாடியுள்ளார். தற்போது என்னுடைய இடம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் அதைப்பற்றி நான் யோசிக்க போவதில்லை இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement