எல்லாம் ஓகே தான். ஆனா சூரியகுமார் யாதவை நெனச்சா தான் – தோல்விக்கு பிறகு பேசிய ரோஹித் காமெடி

Rohit-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 மூவர்களின் முடிவில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியைச் சேர்ந்த ரைலி ருசே 100 ரன்களையும், டி காக் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

INDvsRSA Cup

- Advertisement -

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது. ஆனாலும் ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த டி20 கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : ஒரு அணியாக இந்த போட்டியின் முடிவினை குறித்து நாங்கள் பெரிதாக யோசிக்கவில்லை. எப்பொழுதுமே தோல்வியில் இருந்து எந்த விடயங்களை சரி செய்ய வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம்.

அந்த வகையில் ஒரு குவாலிட்டியான அணிக்கு எதிராக சவாலான சூழலில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்று ரோகித் பேசிக் கொண்டே இருந்தபோது வர்ணனையாளர் இந்திய அணியின் எந்த ஒரு விடயம் உங்களுக்கு கவலை அளிக்கிறது என்ற ஒரு கேள்வியை எழுப்ப : அதற்கு பதில் அளித்த ரோகித் :

- Advertisement -

சூரியகுமார் யாதவின் பார்ம் தான் எனக்கு தற்போது கவலையாக இருக்கிறது என காமெடி செய்து விட்டு சிரிக்கத் தொடங்கினார். பின்னர் நான் தமாஷாக சொன்னேன் எங்களது அணியில் தற்போது பந்துவீச்சு மட்டும்தான் கவலை அளிக்கும் ஒரு விதமாக இருக்கிறது. அதனை நாங்கள் முன்னேற்றம் அடைய தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். கடந்த இரண்டு தொடர்களாகவே சவாலான அணிகளுக்கு எதிராகவே விளையாடியுள்ளோம்.

இதையும் படிங்க : IND vs RSA : ப்ளீஸ் அவங்க 2 பேருக்கும் டெஸ்ட் டீம்ல விளையாட வாய்ப்பு குடுங்க – தினேஷ் கார்த்திக் கோரிக்கை

ஆனாலும் இந்த இரண்டு தொடர்களையும் கைப்பற்றியுள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தாலும் பந்துவீச்சு துறையில் இன்னும் முன்னேற்றம் தேவை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement