IND vs RSA : ப்ளீஸ் அவங்க 2 பேருக்கும் டெஸ்ட் டீம்ல விளையாட வாய்ப்பு குடுங்க – தினேஷ் கார்த்திக் கோரிக்கை

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரினை இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நாளை மறுதினம் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்காக ஷிகார் தவான் தலைமையிலான இரண்டாம் தர இளம்வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க நாளை மறுதினம் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது.

- Advertisement -

அதனால் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பும், இந்திய அணியில் விளையாடி தற்போது வாய்ப்புக்காக காத்திருக்கும் பல்வேறு வீரர்களுக்கும் இந்த தொடரில் இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ரஜத் பட்டிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் பாராட்டிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மேலும் இரண்டு இளம் இந்திய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த ட்விட்டர் கருத்தில் : ரஜத் பட்டிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்தது மகிழ்ச்சி. அதே வேளையில் சர்பராஸ் கான் மற்றும் இந்திரஜித் பாபா ஆகிய இருவருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்க நீங்கள் யோசிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் தினேஷ் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement