- Advertisement -
ஆசிய கோப்பை

டார்கெட் 200 ஆ இருந்தாலும் சரி.. 50 ஆ இருந்தாலும் சரி.. இதுதான் அவரோட கேம்.. அபிஷேக் சர்மாவை – பாராட்டிய கேப்டன்

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியானது :

இதனால் தான் அபிஷேக் ஷர்மா நம்பர் 1 பேட்ஸ்மேன் : சூரியகுமார் யாதவ் பாராட்டு

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 13.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது வெறும் 4.3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரவு அமீரக அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 30 ரன்களை குவித்து அசத்தினார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த சுப்மன் கில் 9 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 20 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடிய அதிரடியான ஆட்டம் குறித்து போட்டி முடிந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடியதை பார்த்தாலே உலகில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பது உங்களுக்கு தெரியும். எங்களது அணிக்கு போட்டியின் துவக்கத்திலேயே அதிரடியான துவக்கத்தை தருவது மட்டுமே அவருடைய பணி. நாம் எட்டக்கூடிய இலக்கு 200 ஆக இருந்தாலும் சரி 50 ஆக இருந்தாலும் சரி அவர் இதேபோன்று தான் அதிரடியான ஆட்டத்தை வழங்குவார். நம்ப முடியாத அளவில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : 4 விக்கெட்ஸ்.. இங்கிலாந்தில் பெஞ்சில் அமர்ந்து.. 7 வருடம் கழித்து ஆட்டநாயகனாக இதான் காரணம்.. குல்தீப் பேட்டி

அடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சூரியகுமார் யாதவ் பேசினார். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து பேசிய அவர் : குல்தீப் யாதவ் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்றும் அவருக்கு உறுதுணையாக ஹார்டிக் பாண்டியா, ஷிவம் துபே, பும்ரா ஆகியோர் பந்து வீசியதாகவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -