IND vs NED : முஹமது ரிஸ்வானை முந்திய சூரியகுமார் – விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

Mohammed Rizwan Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது. அதை தொடர்ந்து அக்டோபர் 27ஆம்தேதியன்று புகழ்பெற்ற சிட்னியில் தன்னுடைய 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சிறப்பாக செயல்பட்டு 179/2 ரன்கள் சேர்த்தது.

தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே 9 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலியுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (39) ரன்கள் குவித்தார். பின்னர் அடுத்து களமிறங்கிய சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62* (44) ரன்களை விளாசினார். மறுபுறம் அவரைவிட அட்டகாசமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51* (25) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

சூப்பர்ஸ்டார் சூர்யா:
அதை தொடர்ந்து 180 ரன்களை கட்டுப்படுத்தும் முனைப்புடன் பந்து வீசிய இந்தியா ஆரம்பம் முதலே நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் துல்லியமாக பந்து வீசி மடக்கிப் பிடித்தது. அதனால் மேக்ஸ் ஓ’தாவுத் 16, கேப்டன் எட்வர்ட்ஸ் 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக டிம் பிரிங்கள் 20 (15) ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆல் அவுட்டாவதை தவிர்த்த அந்த அணி 20 ஓவர்களில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்த வெற்றிக்கு விராட் கோலி 62*, ரோகித் சர்மா 53 ஆகியோர் அதிக ரன்கள் எடுத்திருந்தாலும் 51* (25) ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் அவர்களை விட களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை துவக்கிய அவர் அவர்களைக் காட்டிலும் 204.00 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தலான பினிஷிங் கொடுத்தார். தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமாக செயல்பட்டு வரும் அவர் சூழ்நிலைக்கு எதுவாக இருந்தாலும் மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடித்து ரன்களை குவித்து வருகிறார்.

- Advertisement -

அவருடைய ஸ்டைல் எப்போதுமே ராகுல் போல் ஆமை வேகம் அல்லது மிதவேகமாக அல்லாமல் ஒன்று அடி இல்லையேல் அவுட் என்ற ஸ்டைலாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட அதிரடியாக 15 (10) ரன்களை குவித்த அவர் எப்போதுமே அதிக பந்துகளை தின்று அடுத்த வரும் பேட்ஸ்மின்களுக்கு பாரத்தை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்கும் அவர் தற்சமயத்தில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

1. அதைவிட இப்போட்டியில் 51* ரன்களை குவித்த அவர் 2022இல் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே நம்பர் 1 பேட்ஸ்மேன் இடத்துக்கான போட்டி நிலவும் இவர்களுக்கிடையே முகமது ரிஸ்வான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் தற்போது ரன்கள் பட்டியலில் அவரை முந்தி சூரியகுமார் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் : 867* (25 இன்னிங்ஸ்)
2. முஹம்மது ரிஸ்வான் : 825 (19 இன்னிங்ஸ்)
3. சிகந்தர் ராசா : 653 (20 இன்னிங்ஸ்)

2. மேலும் இப்போட்டியில் அரைசதம் அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் : 8 (2022)*
2. விராட் கோலி : 7 (2016)
3. விராட் கோலி : 7 (2022)*
4. ஷிகர் தவான் : 6 (2018)

3. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 5 இன்னிங்ஸில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் (65 (31), 117 (55), 68* (26), 61 (22), 51* (25)) அவர் படைத்துள்ளார். உலகில் வேறு யாரும் 4 இன்னிங்ஸ் கூட அவ்வாறு அடித்ததில்லை.

Advertisement