ரிஸ்வானை ஓரம் கட்டிய சூரியகுமார், வாழ்நாள் லட்சியத்தின் முதல் இலக்கை தொட்டு உலகசாதனை – வாழ்த்தும் ரசிகர்கள்

Mohammed Rizwan Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்Categoriesபையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளதால் எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் பேட்டிங் வரிசையில் பார்முக்கு திரும்பிய விராட் கோலியுடன் சூரியகுமார் யாதவ் மட்டுமே அட்டகாசமான ஃபார்மில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். மும்பையைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்காக வெல்லும் லட்சியத்துடன் கடந்த 2010 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து அதிரடியான ரன்களை சேர்த்து வந்தார்.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் ஒரு கட்டத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்தியாவுக்காக விளையாடாத வீரர் என்ற சாதனையும் படைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரை தேர்வுக்குழு புறக்கணித்து வந்ததால் நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி வந்தார்கள். அதன் பயனாக ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தனது லட்சிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்தார்.

- Advertisement -

உலக சாதனை:
உள்ளூர் கிரிக்கெட்டிலேயே வெறியுடன் விளையாடிய அவர் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்ததும் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட துவங்கினர். குறிப்பாக ராகுல் போன்ற இதர வீரர்களை போல் அதிக பந்துகளை எதிர்கொண்டு அவுட்டாகி அடுத்த வீரர்களுக்கு பாரத்தை ஏற்படுத்தாமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து அழுத்தத்தை எதிரணி மீது போடும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றி வருகிறார்.

மேலும் எப்படி போட்டாலும் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் அவரை ரசிகர்கள் ரசிகர்களும் வல்லுனர்களும் இந்தியாவின் ஏபிடி என கொண்டாடும் நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 6 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவர் மடமடவென 20+ போட்டிகளிலேயே தரவரிசையில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி முதலிடத்தில் இருந்த முகமது ரிஸ்வானுக்கு போட்டியளித்து வந்தார். அதில் தொடக்க வீரராக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ரிஸ்வானை விட அழுத்தமான மிடில் ஆர்டரில் களமிறங்கி மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணிகளை வெளுத்து வாங்கி வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் சூரியகுமார் தான் உலகின் நம்பட் ஒன் பேட்ஸ்மேன் என்பதை ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தார்கள்.

- Advertisement -

குறிப்பாக 2022 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ரிஸ்வானை மிஞ்சினார். மேலும் இந்த உலகக் கோப்பையில் முகமது ரிஸ்வான் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தும் நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இதர இந்திய வீரர்கள் திணறிய போது தனி ஒருவனாக 68 (40) ரன்கள் குவித்து காப்பாற்றியது உட்பட சிறப்பான செயல்பாடுகளை சூரியகுமார் வெளிப்படுத்தி வருகிறார். அதனால் தற்போது புதிதாக ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசையில் முகமது ரிஸ்வானை மிஞ்சிய சூரியகுமார் யாதவ் உலகின் புதிய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் 842 புள்ளிகளை கொண்ட ரிஸ்வானை விட 863 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தொட முடியாத உச்சத்திற்கு சூர்யா சென்றுள்ளார். பொதுவாக 20+ வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை கொஞ்சமும்  வீணடிக்காமல் இந்தியாவுக்கு அபாரமாக செயல்பட்டு இன்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மனாக உருவெடுத்துள்ள சூரியகுமார் தன்னுடைய லட்சியத்தில் முதல் இலக்கை எட்டி விட்டார் என்றே கூறலாம். அவருடைய அடுத்த இலக்கு இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து சாதனை படைத்துள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Advertisement