எங்களால நாளைக்கே எல்லாத்தையும் மறக்க முடியாது.. கேப்டன் சூர்யாகுமார் சோகமான பேட்டி

Suryakumar Yadav 2
- Advertisement -

நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா பதிவு செய்த தோல்வியிலிருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற எதிரணிகளை துவம்சம் செய்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்தது.

அந்த வகையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் அபாரமாக செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக இம்முறை கண்டிப்பாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி 2011 போல இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிடும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

- Advertisement -

மறக்க முடியல:
ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து ரசிகர்களின் மொத்த நம்பிக்கையும் தூளாக்கியது. அதை விட அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது விளையாட உள்ளது ரசிகர்களுக்கு வந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ரசிகர்களுக்கே அப்படி என்றால் தங்களுக்கு அடுத்த நாளே அனைத்தையும் மறந்து விட்டு ஜாலியாக விளையாடும் அளவுக்கு 2023 உலகக் கோப்பை தோல்வி இல்லையென சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 தொடரில் கேப்டனாக செயல்பட உள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது சற்று ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஏனெனில் அந்த பயணத்தை நீங்கள் திரும்பிப் பார்த்தால் அது மகத்தானதாக இருந்தது”

- Advertisement -

“ஒவ்வொரு வீரர்கள் மட்டுமல்லாமல் மொத்த இந்தியாவும் நாங்கள் களத்தில் வெளிப்படுத்திய திறமைகளையும் செயல்பாடுகளையும் நினைத்து பெருமைப்பட்டார்கள். அந்தளவுக்கு தொடர் முழுவதும் நாங்கள் நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடினோம். அதற்காக நாங்களும் பெருமைப்படுகிறோம். இருப்பினும் இந்த தோல்வியை மறப்பதற்கு சில காலங்களாகும்”

இதையும் படிங்க: எங்களால நாளைக்கே எல்லாத்தையும் மறக்க முடியாது.. கேப்டன் சூர்யாகுமார் சோகமான பேட்டி

“ஏனெனில் அனைத்தையும் மறந்து விட்டு அடுத்த நாள் காலை எழுந்து விளையாடலாம் என்பது போல் அந்த தோல்வி அமையவில்லை. அந்தப் பெரிய தொடரை நாங்கள் வெல்வதற்கு விரும்பினோம். இருப்பினும் அதை நீங்கள் மறந்து விட்டு நகர்ந்தாக வேண்டும். இந்த புத்துணர்ச்சியான அணியில் நிறைய புதுமுக வீரர்கள் இருக்கின்றனர். எனவே இந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்துவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement