அடுத்த வருஷம் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – சூரியகுமார் யாதவ் அதிரடி

SKY
Advertisement

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 15 சீசன்களில் அதிக முறையாக மும்பை அணி 5 முறை கோப்பையை வென்று சாம்பியன் அணியாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரை ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் கைப்பற்றி அசத்தியது. ஆனால் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மும்பை அணிக்கு ஒரு மறக்கக்கூடிய சீசனாகவே மாறி உள்ளது.

Mumbai Indians MI

ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய அணியாக பார்க்கப்படும் மும்பை இம்முறை புள்ளி பட்டியலில் 10-வது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது. இது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தினையும் அளித்திருந்தது. அதோடு அணியில் உள்ள பல வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் அடுத்த ஆண்டு அவர்கள் எவ்வாறு இதிலிருந்து மீண்டு வர போகிறார்கள் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் மும்பை அணி மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றும் என்று மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : இந்த ஆண்டு எங்களால் எதையும் செய்ய முடியாமல் போனது. ஆனால் அடுத்த ஆண்டும் இப்படி இருக்காது.

MI Mumbai Indians

நிச்சயம் 6-வது ஐபிஎல் கோப்பையை நாங்கள் அடுத்த ஆண்டு ஜெயிக்க போவது உறுதி. மேலும் எங்களுடைய அணியின் கம்பேக் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அடுத்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும் என்று சூர்யகுமார் யாதவ் அதிரடியாக கூறியுள்ளார். அதோடு மும்பை அணியில் புதிதாக இணைந்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் டேவால் ப்ரேவிஸ் குறித்து பேசிய அவர் :

- Advertisement -

மும்பை அணியில் ப்ரேவிஸ் தற்போது தான் புதிதாக இணைந்துள்ளார். அவர் இன்னும் எங்கள் அணியை பற்றி புரிந்துகொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது. நிச்சயம் அவர் இனி வரும் தொடர்களில் அதனை புரிந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதோடு நாங்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை எந்தப்போவதும் உறுதி என்று சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தோனியோட ஜெராக்ஸ் இவர் தான். ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை இருக்கு – சாய் கிஷோர் ஓபன்டாக்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட சூரியகுமார் யாதவ் மீண்டும் அணியில் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து தொடரின் முடிவிலும் அவர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறியது மும்பை அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

Advertisement