தோனியோட ஜெராக்ஸ் இவர் தான். ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை இருக்கு – சாய் கிஷோர் ஓபன்டாக்

Sai-kishore-1
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின்போது அவரை குஜராத் அணி நல்ல விலைக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதன் காரணமாக சென்னை அணியில் இருந்து வெளியேறிய அவர் முதன் முறையாக குஜராத் அணிக்காக விளையாட இடம்பிடித்தார்.

Sai Kishore

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த சீசனில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதோடு மிகவும் குறைவான அளவில் ரன்களையே விட்டுக் கொடுத்ததால் அவரது சேர்க்கை குஜராத் அணிக்கு நல்ல பலமாக அமைந்தது. அதோடு அறிமுக தொடரில் அவர் விளையாடி இருந்தாலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான இறுதிப் போட்டியிலும் அவர் சேர்க்கப்பட்டார்.

இதனால் நிச்சயம் இனிவரும் சீசன்களில் அவர் குஜராத் அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக மாறுவார் என்று உறுதியாக நம்பலாம். சாய் கிஷோர் லக்னோ அணிக்கு எதிராக அறிமுக போட்டியில் 2 ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் அவரைப் பாராட்டிய கேப்டன் பாண்டியன் கூறுகையில் : நிச்சயம் சாய் கிஷோர் ஒரு தரமான ஸ்பின்னர். அவர் டெக்னிக்கலாக மிகவும் வலுவாக இருக்கிறார். அவரது உயரம் மற்றும் வேகம் ஆகியவை நன்றாக இருக்கிறது என்று பாராட்டியிருந்தார்.

Sai Kishore GT

இந்நிலையில் தற்போது குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றதற்கு பிறகு பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டு சாய் கிஷோர் புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் தோனியின் தலைமையின் கீழும் இடம் பெற்றுள்ளேன். தற்போது பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் விளையாடி வருகிறேன். தோனி மற்றும் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமை இருக்கிறது.

- Advertisement -

தோனி மற்றும் பாண்டியா ஆகிய இருவருமே தங்களது அணியில் விளையாடும் வீரர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளியே கொண்டு வருகிறார்கள். அவர்கள் இருவருமே தங்களது அணியில் உள்ள வீரர்களை முன்வைத்து அவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்தும் விளையாட வைக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

இதையும் படிங்க : சோளி முடிஞ்சுனு சொன்னாங்க ஆனால் சாதிச்சுட்ட ப்ரோ ! ஹர்டிக் பாண்டியவை பாராட்டிய அவரின் சகோதரர்

பாண்டியா தனது முதல் சீசனில் எங்களை அற்புதமாக வழி நடத்தியுள்ளார். என்னைப்பொருத்தவரை தோனியின் ஜூனியர் வெர்ஷனாக நான் பாண்டியாவை பார்க்கிறேன். அந்த அளவிற்கு அவர் குஜராத் அணியை சிறப்பாக கையாள்கிறார். நிச்சயம் இனிவரும் தொடர்களிலும் குஜராத் அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் என சாய் கிஷோர் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement