என்னை விடுங்க. அவரு என்ன அழகா பேட்டிங் பண்ணாருன்னு பாத்தீங்களா – சூரியகுமார் யாதவ் புகழாரம்

Suryakumar-Yadav-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டமானது நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் மிகச்சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 237 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 61 ரன்கள், கே.எல் ராகுல் 57 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Suryakumar Yadav

- Advertisement -

அவர்களை தவிர்த்து ரோகித் சர்மா(43), விராட் கோலி(49), தினேஷ் கார்த்திக்(17) என அனைவருமே தங்களது பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது எளிதில் இந்த போட்டியில் தோற்றுவிடும் என்று எதிர்பார்த்த வேளையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதிவரை விடாமல் போராடியது.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106 ரன்களும், டி காக் 69 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 61 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

David Miller IND vs Sa

இந்நிலையில் போட்டி முடிந்து தனது அதிரடி குறித்து பேசிய சூர்யா குமார் யாதவ் கூறுகையில் : நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போதே ஒரு விடயத்தை கிளியராக புரிந்து கொண்டோம். அது யாதெனில் துவக்க வீரர்கள் சரியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது அந்த டெம்போவை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

பின்னர் நான் என்னுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியாக விளையாடினேன். அவர்கள் விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதனால் அதிரடியாக விளையாடினேன். என்னுடைய இந்த ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரரான டேவிட் மில்லர் விளையாடிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் அவ்வளவு அழகாக விளையாடியிருந்தார். அவருடைய திட்டங்கள் மற்றும் பேட்டிங் என இரண்டுமே அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs SA : இந்த கண்டத்துக்கு முடிவே இல்லையா – மோசமான வரலாற்று சாதனை படைத்த இளம் இந்திய பவுலர், அலறும் ரசிகர்கள்

முதலில் நாம் பேட்டிங் செய்யும்போது எவ்வளவு டார்கெட் வைக்க வேண்டும் என்பதை நினைத்து விளையாட முடியாது. வரும் அளவிற்கு ரன்களை குவித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் இந்த போட்டியில் விளையாடியதாக சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement