அந்த பையன் நெருப்பு மாதிரி ஆடுறான்.. அவன் தான் இந்திய அணியின் எதிர்காலம்.. சி.எஸ்.கே வீரரை பாராட்டிய – சூரியகுமார்

SKY and Ayush Mhatre
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதினா. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் தங்களது அணி பந்துவீசம் என்று அறிவித்தார்.

அந்த பையன் தான் இந்திய அணியின் எதிர்காலம் : சூரியகுமார் பாராட்டு

அதனை தொடர்ந்து முதலில் விளையாட்டிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தல் 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது : 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை குவித்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவர் ஆட்டமிழக்கும் முன்பு வரை சென்னை அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது விக்கெட் இந்த போட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 17 வயது வீரரான அவரது இந்த அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆயுஷ் மாத்ரேவின் இந்த ஆட்டம் குறித்து பாராட்டி பேசியுள்ள இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறிய பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

ஆயுஷ் மாத்ரேவின் இன்னிங்ஸ் அதிரடியாக ஆடும் நோக்கத்துடனும், தைரியத்துடனும், நெருப்பு போன்று இருந்தது. இவர்தான் இந்திய அணியின் எதிர்காலம் இவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆயுஷ் மாத்ரே வெகு விரைவில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 33 ரன்ஸ்.. ஹெலிகாப்டருடன் மிஸ்ஸான வெற்றி.. தோனியின் மூளை நல்லாருக்கா? இனியும் ஆடனுமா? கில்கிறிஸ்ட் அதிருப்தி

உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக ஆயுஷ் மாத்ரேவுடன் இணைந்து விளையாடியிருந்த சூரியகுமார் அப்போதே அவரை பாராட்டியிருந்தார். அந்த வகையில் அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுஷ் மாத்ரே மிகக் கடுமையாக உழைத்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உள்ளது என்றால் பயிற்சிக்கு முதல் நபராக வரும் அவர் மைதானத்தை விட்டு கடைசியாக தான் வெளியேறுவார். அந்த அளவிற்கு அவர் அர்ப்பணிப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நிச்சயம் அவர் இந்திய அணியில் நீண்ட தூரம் பயணிப்பார் என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement