விராட் கோலியை மிஞ்சிய சூரியகுமார் – வரலாற்றின் மிகச்சிறந்த ஆல் டைம் ஆசிய டி20 பேட்ஸ்மேனாக பிரம்மாண்ட சாதனை

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அதிரடியாக சதமடித்து 112* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

பொதுவாகவே மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அதிரடியாக விளையாடக் கூடிய அவர் அப்போட்டியில் முகத்துக்கு நேராக வந்த ஒரு ஃபுல் டாஸ் பந்தை அப்படியே முட்டி போட்டு விக்கெட் கீப்பருக்கு மேல் அடித்த சிக்ஸரையும் விழுந்து விழுந்து விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அடித்த சிக்ஸர்களையும் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த வகையில் எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு புதுப்புது ஷாட்டுகளை அடித்து மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

கிங் கோலியை மிஞ்சிய சூர்யா:
மேலும் 2 பீல்டர்கள் மட்டும் வெளியே நிற்கும் பவர் பிளேவில் களமிறங்கி தடவலாக செயல்படும் தொடக்க வீரர்களுக்கு மத்தியில் அழுத்தமான மிடில் ஓவரில் கொஞ்சமும் பயமின்றி அடித்து நொறுக்கும் அவர் அண்ட்ரே ரசல் போல அதிரடியாக அடிக்காமலேயே அவரை விட 180+ என்ற அதிகப்படியான ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணியை பந்தாடுகிறார். அதே போல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கும் டீ வில்லியர்ஸ் கூட தொடர்ச்சியாக இந்தளவுக்கு பெரும்பாலான போட்டிகளில் அசத்தியதில்லை.

ஆனால் இவர் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து பெரிய ரன்களை குவித்த காரணத்தாலேயே குறுகிய காலத்திலேயே ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக கடந்த 2022 ஆசிய கோப்பையின் போது முன்னேறினார். அந்த வகையில் கிறிஸ் கெயில், டீ வில்லியர்ஸ் ஆகியோரை மிஞ்சிய டி20 கிரிக்கெட்டின் புதிய யுனிவர்சல் பாஸ் என்றும் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் ஒருவர் என்றும் ஏராளமான முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் சூரியகுமார் நனைந்து வருகிறார்.

- Advertisement -

மேலும் “இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடப்படும் நீங்கள் விரைவில் என்னையே மிஞ்சப் போகிறீர்கள்” என்று ஏற்கனவே டீ வில்லியர்ஸ் நேரடியாக அவரை பாராட்டினார். அப்படி தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களுக்குள் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னர் அவதரித்துள்ள சூரியகுமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்த தொடக்க வீரர் அல்லாத முதல் வீரர், 3 சதங்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த ஒரே வீரர் ஆகிய உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.

மொத்தத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனுக்கு சிறந்த அடையாளமாய் செயல்பட்டு வரும் அவர் இலங்கை டி20 தொடருக்கு பின்பாக ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் ஜொலித்து வருகிறார். குறிப்பாக இலங்கைக்கு எதிராக அடித்த சதத்தால் 836 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் முகமது ரிஸ்வான் தொட முடியாத அளவுக்கு கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ள சூரியகுமார் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 900 கேரியர் புள்ளிகளை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள அவர் அதே பட்டியலில் வரலாற்றின் மிகச்சிறந்த இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலியை மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு வரை 897 புள்ளிகளை பெற்ற விராட் கோலி தான் ஐசிசி ஆல் டைம் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்.

இதையும் படிங்க: இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் – இலங்கையின் 12 வருட துரோக சம்பவத்துக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

தற்போது அவர் 4வது இடத்தில் உள்ள நிலையில் ஆல் டைம் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ள சூரியகுமார் ஆசியாவின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாகவும் வரலாறு படைத்துள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் 915 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement