இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் – இலங்கையின் 12 வருட துரோக சம்பவத்துக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. கௌஹாத்தியில் ஜனவரி 10ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 373/7 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் எடுக்க நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 113 ரன்கள் விளாசினார்.

அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கை முடிந்தளவுக்கு போராடியும் 50 ஓவர்களில் 306/8 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் வெற்றிக்கு போராடிய கேப்டன் தசுன் சானாக்கா சதமடித்து 108* (88) ரன்களும் நிசாங்கா 72 ரன்களும் குவித்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் சிறப்பான வெற்றியை பதிவு செய்த இந்தியா அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

- Advertisement -

அதான் இந்தியன்:
முன்னதாக இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4வது பந்தில் எதிர்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதால் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதற்காக சனக்கா ஏமாற்றமடைந்த நிலையில் அதை ஏற்றுக்கொண்ட நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.

இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.

- Advertisement -

அதே போல் ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010ஆம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர். அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3வது போட்டியில் இலங்கை நிர்ணயித்த 170 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய வீரேந்திர சேவாக் 11 பவுண்டர் 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிங்கமாக சிக்சரைப் பறக்க விட்ட வீரேந்திர சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

- Advertisement -

அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது. அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.

இதையும் படிங்க: 200 சதங்கள் அடிச்சாலும் சச்சினாக முடியாது, விராட் கோலியை விமர்சித்த கம்பீர் – மஞ்ரேகர் கொடுத்த பதிலடி இதோ

ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement