- Advertisement -
ஆசிய கோப்பை

பாகிஸ்தானை சந்திக்கவே இதை செஞ்சேன்.. அமீரகத்தை ஈஸியா இந்தியா சாய்க்க இதான் காரணம்.. சூரியகுமார்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அணியை சொந்த மண்ணில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய அமீரகம் மோசமாக பேட்டிங் செய்து 57 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக அலிசான் சராஃபு 22, கேப்டன் முகமது வாசிம் 19 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா அதிரடியாக பேட்டிங் செய்து 4.3 ஓவரில் 60/1 ரன்கள் எடுத்து எளிதாக வென்று ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவக்கியது.

- Advertisement -

பாகிஸ்தான் போட்டிக்காக:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 30, சுப்மன் கில் 20*, கேப்டன் சூரியகுமார் 7* ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் அடுத்தப் போட்டியில் இதே துபாயில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்க உள்ளது. அப்போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காகவே இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து பார்த்ததாக கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

இப்போட்டி 5 ஓவருக்குள் முடிந்து விட்டதால் தங்களுக்கு முழுமையான சம்பளம் கொடுக்கப்படுமா? என்று தெரியவில்லை என்றும் தொகுப்பாளர் கேள்விக்கு அவர் கலகலப்பாக பதில் கூறியுள்ளார். மேலும் தங்களுடைய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியது அமீரகத்தை எளிதாக வீழ்த்த காரணம் என்று தெரிவிக்கும் சூரியகுமார் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிட்ச் எப்படி விளையாடுகிறது என்பதைப் பார்க்கவே பவுலிங் செய்தோம்”

- Advertisement -

இந்தியா வெற்றி:

“அது 2வது இன்னிங்சிலும் அப்படியே இருந்தது. இப்போட்டிக்கான முழுமையான சம்பளம் கிடைக்குமா என்பது பற்றி பின்னர் பேசுவோம் (சிரிக்கிறார்). எங்கள் வீரர்களிடமிருந்து தெளிவான செயல்பாடுகள் வந்தன. களத்தில் நல்ல எனர்ஜி மற்றும் அணுகுமுறையை விரும்பிய நாங்கள் அதை அப்படியே பேட்டிங்கில் எடுத்து வந்தோம். எங்களுடைய நிறைய வீரர்கள் சமீபத்தில் இங்கே சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடினார்கள்”

இதையும் படிங்க: 4.3 ஓவரில் 60.. 93 பந்துகள் மீதம்.. அமீரகத்தை நொறுக்கிய இந்தியா.. இலங்கையை முந்தி 2 சாதனை வெற்றி

“பிட்ச் நன்றாக தெரிந்தாலும் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. துபாயில் நிறைய வெப்பம் இருப்பதால் ஸ்பின்னர்கள் அதிகம் டாமினேட் செய்கின்றனர். அதே சமயம் பாண்டியா, துபே, பும்ரா ஆகியோரும் ஆதரவளித்தனர். இதனாலேயே அபிஷேக் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். இலக்கு 200 அல்லது 50 உட்பட எதுவாக இருந்தாலும் அவர் அணியை முன்னிறுத்தி விளையாடுவது நம்ப முடியாதது. அவர் எங்களுடைய சேசிங்கிற்கான தொனியை அமைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல ஆட்டம் இருக்கும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்கு நாங்களும் உற்சாகத்துடன் இருக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -