அவர் ரோபோ இல்ல.. அபிஷேக் – கில் நீரும் நெருப்பும் மாதிரி பாகிஸ்தானை அடிச்சாங்க.. கேப்டன் சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav 22
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 171/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை வெளுத்து வாங்கி அரை சதத்தை அடித்து 74 (39) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து அசத்திய சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு 47 (28) ரன்கள் குவித்து அசத்தினார். அதை வீணடிக்காமல் திலக் வர்மா 30* (19) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

இந்தியா அசத்தல் வெற்றி:

அதனால் 18.5 ஓவரில் 174/4 ரன்களை அடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றில் தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்று பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் துபாயில் நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் தங்களுடைய வீரர்கள் தடுமாறியதாக இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வழக்கத்துக்கு மாறாக 4 ஓவரில் 45 ரன்கள் வழங்கிய ஜஸ்ப்ரித் பும்ரா வெப்பத்திலும் அசத்துவதற்கு ரோபோ கிடையாது என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் கில் – அபிஷேக் ஜோடி நீரும் நெருப்பும் போல பாகிஸ்தானை எதிர்கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு போட்டியிலும் எங்களுடைய வீரர்கள் முன்னேறி செல்வது என்னுடைய வேலையை எளிதாக்குகிறது”

- Advertisement -

நீர் நெருப்பு ஜோடி:

“எங்களுடைய வீரர்கள் நிறைய போராட்ட குணத்தைக் காண்பித்தனர். முதல் 10 ஓவர்களுக்குப் பின்பும் அவர்கள் அமைதியாக இருந்தனர். தண்ணீர் இடைவேளைக்கு பின் போட்டி இனிமேல் தான் ஆரம்பமாகிறது என்று அவர்களிடம் சொன்னேன். ஜஸ்ப்ரித் பும்ரா ரோபோ கிடையாது. அவருக்கும் மோசமான நாள் அமையும் என்பதால் பரவாயில்லை. துபாய் எங்களை சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு விளையாட வைத்தது”

இதையும் படிங்க: 74 ரன்ஸ்.. பாகிஸ்தானை சொல்லி அடித்த கில்.. இந்தியா வெற்றி.. கம்பீருக்கு பின் அபிஷேக் 17 வருட சாதனை

“அபிஷேக் – கில் ஒருவரை ஒருவர் சார்ந்து விளையாடினார்கள். அது நெருப்பு மற்றும் பனிக்கட்டியை போன்ற கலவையாகும். முதல் இன்னிங்ஸ் முடிவில் (கேட்ச்கள் தவற விட்டதற்காக) எங்களுடைய ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் வெண்ணை தடவப்பட்ட விரல்களைக் கொண்ட எங்கள் வீரர்களுக்கு இமெயில் செய்தார்” என்று கலகலப்பாக பேசினார்.

Advertisement