
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் பரம எதிரி பாகிஸ்தானை இறுதிப்போட்டி உட்பட 3 முறை இந்தியா தோற்கடித்து மிரட்டியது. முன்னதாக அத்தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நேரடியாக ஓப்பனிங்கில் அபிஷேக் ஷர்மாவுடன் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அதனால் ஓப்பனிங்கில் அசத்தி வந்த சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று அஸ்வின் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். இருப்பினும் ஓப்பனிங்கில் அடித்த 3 சதங்களை மதித்த கௌதம் கம்பீர் அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் ஓரளவு அசத்திய சாம்சன் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை ஆசியக் கோப்பையில் கழற்றி விட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் மிடில் ஆடரில் விளையாடினாலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்புக் கொடுத்ததாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா அணிக்குள் வந்ததால் சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாட மாட்டார் அல்லது கழற்றி விடப்படுவார் என்பதே அனைவருடைய எண்ணமாக இருந்தது. ஆனால் என்னுடைய மனதில் சாம்சன் விளையாட மாட்டார் என்று எப்போதும் நினைத்ததில்லை. துபாயில் எங்களுடைய முதல் பயிற்சிலேயே சாம்சன் விக்கெட் கீப்பராக பயிற்சி எடுத்தார்”
“அப்போது நானும் கௌதம் கம்பீர் பாயும் சேர்ந்து அவரது இடத்தைப் பற்றி விவாதித்தோம். அந்த விவாதத்தில் கடந்த 10 – 15 போட்டிகளில் சாம்சன் நன்றாக விளையாடியுள்ளார் என்று கம்பீர் சொன்னார். அதனால் உங்களுடைய பேட்டிங் இடம் மாறலாம் அல்லது குறைவான பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கலாம் என்று சாம்சனிடம் சொன்னோம். ஆனால் அவருடைய தாக்கம் அப்படியே இருக்கும் என்று முடிவெடுத்தோம்”
இதையும் படிங்க: ப்ராட்மேன், சேவாக்கையே மிஞ்சும் ஜெய்ஸ்வால்.. சதத்தை டாடியாக மாற்றுவதில் 71.40% அபார சாதனை
“அதனால் களத்திற்கு எப்போது வந்தாலும் நம்முடைய வாய்ப்பை எப்படி அணிக்காக அதிகம் பயன்படுத்தலாம் என்பதே அவருடைய சிந்தனையாக இருக்க வேண்டும்” என்று கூறினார். இதை தொடர்ந்து அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதத்தை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது