ரோஹித் இருந்துருந்தா இதை செஞ்சுருப்பேன்.. பவுண்டரியில் கால் உரசியதா? கேட்ச் பிடித்தது எப்படி? சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav Catch
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா வரலாறு படைத்தது. அப்போட்டியில் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் கேட்ச்சை அபாரமாக பிடித்த சூரியகுமார் யாதவ் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

இருப்பினும் அப்போது சூரியகுமார் கால் பவுண்டரி எல்லையை உரசியதாக பாகிஸ்தான், இலங்கை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா கொஞ்சம் அருகில் இருந்திருந்தால் பவுண்டரிக்குள் செல்லாமல் அவரிடம் பந்தை தூக்கிப் போட்டிருப்பேன் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கேட்ச்சின் பின்னணி:
மேலும் இதற்காக தாம் உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் தினம்தோறும் ஸ்பெஷல் பயிற்சிகளை எடுப்பதாகவும் சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக ரோகித் பாய் லாங்க் ஆன் திசையில் இருக்க மாட்டார். ஆனால் அந்த தருணத்தில் அவர் அங்கே இருந்தார். எனவே கேட்ச் வந்த போது ஒரு நொடி நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார்”

“அதன் பின்பே நான் பந்தை பிடிக்கும் எண்ணத்துடன் ஓடினேன். ஒருவேளை ரோகித் அருகில் இருந்திருந்தால் நான் பந்தை அவரிடம் தூக்கி போட்டிருப்பேன். அதே சமயம் பந்தை நான் தூக்கிப் போட்ட போது பவுண்டரி எல்லையை தொடவில்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும் பந்தை பிடிக்க மீண்டும் வரும் போது எனது கால் பவுண்டரியில் பட்டுவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். எனவே அது நியாயமான கேட்ச் என்பது எனக்கு தெரியும்”

- Advertisement -

“அதற்காக நான் பல்வேறு மைதானங்களில் காற்றை அடிப்படையாக வைத்து பயிற்சிகளை செய்துள்ளேன் இப்போட்டியில் நான் கொஞ்சம் அகலமாக நின்றேன். ஏனெனில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் ஆகியோர் ஒய்ட் யார்க்கர் பந்துக்காக ஒரு ஃபீல்டரை வைத்திருந்தனர். எனவே மில்லர் நேராக அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்”

இதையும் படிங்க: 2023இல் தள்ளியது யார்? சூரியகுமார் கேட்ச்சில் பவுண்டரி நகர்ந்த உண்மையுடன்.. விமர்சனத்துக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

“அந்தப் போட்டிக்கு முன்பாக கூட நாங்கள் உயரமான கேட்ச்கள், ஃபிளாட்டான கேட்சுகள், டைரக்ட் ஹிட், ஸ்லிப் கேட்ச் போன்றவற்றை 10 – 12 நிமிடங்கள் பயிற்சி செய்தோம். அது ஒரு நாள் பயிற்சியில் வருவது கிடையாது. ஐபிஎல் மற்றும் இருதரப்பு தொடர்களில் கூட அதை செய்வோம்” என்று கூறினார். மேலும் இது போன்ற கேட்ச்களை பிடிக்க முழுமையான ஃபிட்னஸ் கடைப்பிடிப்பதாகவும் சூரியகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement