என்னா மனுஷன்யா.. டி20 உ.கோ வென்ற இந்திய அணியை பாராட்டிய தருணத்தில்.. மோடி செய்ததை கவனிச்சீங்களா

Narendra Modi
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்ப முதலே தோற்காமல் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து பார்படாஸ் நகரில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக தாமதமாக புறப்பட்ட இந்திய அணியினர் ஜூலை நான்காம் தேதி நாடு திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் பிசிசிஐ சார்பில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதே போல ரசிகர்களும் அதிகாலை நேரத்திலேயே விமான நிலையத்திற்கு சென்று இந்திய அணிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

மோடியின் செயல்:
அதன் பின் தலைநகர் டெல்லிக்கு சென்ற இந்திய அணியினர் காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது இந்தியாவுக்காக 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மோடி சுமார் ஒரு மணி நேரம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அவருடைய வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்ட இந்திய அணியினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் டி20 உலகக் கோப்பையை மோடியின் கையில் கொடுத்தனர். இருப்பினும் அதைத் தன்னுடைய கையில் வாங்காத மோடி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது கைகளிலேயே வைத்து பிடிக்குமாறு சொன்னார். பின்னர் அவர்களுடைய கைகளுக்கு கீழே தம்முடைய கைகளை வைத்த நரேந்திர மோடி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

அதாவது கடினமாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் கைகள் தான் கோப்பையை பிடிக்க தகுதியானது என்ற வகையில் மோடி அந்த இடத்தில் மரியாதை செய்தார். அதைப் பார்க்கும் ஒருதரப்பு ரசிகர்களும் பிஜேபி தொண்டர்களும் “என்னா மனுஷன்யா” என்று நரேந்திர மோடியை பாராட்டி வருகின்றனர். அதைத் தொடர்ந்து பிரதமருடன் சேர்ந்து இந்திய அணியினர் காலை உணவை உண்டனர்.

இதையும் படிங்க: ஐசிசி நியாயமா நடந்துக்குறாங்களா.. இல்ல இந்தியாவுக்கு ஜால்ரா தட்டுறாங்களான்னு இப்போ தெரியும்.. சல்மான் பட்

இதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மும்பையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான அணி வெற்றியை இந்திய ரசிகர்களுடன் கொண்டாட உள்ளனர். முன்னதாக 2023 உலகக் கோப்பை தோல்வியை சந்தித்த பின் உடைமாற்றும் அறைக்கு சென்ற நரேந்திர மோடி இந்திய அணியினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement