ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக அந்தத் தொடரில் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பலரும் விமர்சித்தனர். குறிப்பாக இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் கயானா நகரில் தான் விளையாடும் என்று ஆரம்பத்திலேயே ஐசிசி அறிவித்து விட்டது.
ஏனெனில் ட்ரினிடாட் நகரில் விளையாடினால் அதிகாலை 6:00 மணிக்கு அப்போட்டியை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். எனவே ஒளிபரப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இரவு 8 மணிக்கு நகரில் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் இந்தியா விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. ஆனால் அதற்காக செமி ஃபைனல் மைதானத்தை முன்கூட்டியே அறிவித்து இந்தியாவுக்கு ஆதரவாக நடந்து கொண்ட ஐசிசி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை செய்ததாக மைக்கேல் வாகன் விமர்சித்தார்.
ஐசிசி நிலைப்பாடு:
அந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. ஆனால் எல்லைப் பிரச்சனை காரணமாக 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்ற விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டியை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றியும் கண்டது. எனவே 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் ஐசிசி பொதுவாக நடந்து கொள்கிறதா? அல்லது இந்தியாவுக்கு சாதகமாக ஜால்ரா தட்டுகிறதா? என்பதை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தெரிந்து கொள்ளலாம் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஏனெனில் தங்கள் நாட்டுக்கு வராமல் அடம் பிடிக்கும் இந்தியாவை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானில் விளையாட வைப்பது ஐசிசியின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எல்லாவற்றையும் பரபரப்பாக்க முயற்சிக்கிறோம். ஜெய் ஷா சாதகமான சிக்னல் கொடுத்ததாக சில தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் அவர் எந்த சிக்னலும் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. அவரிடமிருந்து நல்ல சிக்னல் கிடைத்திருந்தால் கூட நான் உற்சாகமாக இருந்திருக்க மாட்டேன்”
இதையும் படிங்க: என்கிட்ட 10 முறை கேட்டாங்க.. 10 முறை சொன்னதையும் விராட் கோலி காப்பாத்திட்டாரு.. பாண்டிங் பெருமிதம்
“ஏனெனில் அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வைப்பதை உறுதி செய்வது ஐசிசியின் கடமை. ஒருவேளை இந்தியா வந்தால் வரவேற்கப்படுவார்கள். இல்லையென்றால் அதை ஐசிசி சமாளிக்க வேண்டும். அவர்களால் மற்ற நாடுகளைப் போல இந்தியாவையும் சமாளிக்க முடியுமா என்பதை இப்போது கண்டறிய முடியும். ஒரு கட்டுப்பாட்டாளராக அவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் எந்தளவுக்கு நடுநிலையுடன் செயல்படுகிறார்கள் என்பதை இது காண்பிக்கும்” என்று கூறினார்.



