என்கிட்ட 10 முறை கேட்டாங்க.. 10 முறை சொன்னதையும் விராட் கோலி காப்பாத்திட்டாரு.. பாண்டிங் பெருமிதம்

Ricky Ponting 3
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கிய அவர் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி தடுமாற்றமாக செயல்பட்டார்.

ஆனால் அவரை மீண்டும் 3வது இடத்தில் களமிறக்குமாறு நிறைய கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் ஆதரவால் தொடர்ந்து துவக்க வீரராகவே விளையாடிய விராட் கோலி மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் குவித்தார். குறிப்பாக 34/3 என இந்தியா தடுமாறிய போது அசத்திய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:
அந்த வகையில் தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சுமாராக விளையாடிய போது விராட் கோலியின் ஃபார்ம் பற்றி 10 முறை தம்மிடம் கேட்கப்பட்டதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த 10 முறையும் அசத்துவார் என்று தாம் சொன்ன வார்த்தையை விராட் கோலி ஃபைனலில் காப்பாற்றியதாக பாண்டிங் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் விராட் கோலி இந்திய அணியில் இருக்க வேண்டுமா? என்ற பேச்சுக்கள் காணப்பட்டது. பின்னர் தொடர் நடைபெறும் போது அவர் ரன்கள் அடிக்கவில்லை. அப்போது குறைந்தது 10 முறை அவருடைய ஃபார்ம் பற்றி என்னிடம் கேட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் அவரை விடுங்கள். பெரிய தருணம் வரும் போது கண்டிப்பாக அவர் உயர்ந்து நின்று அசத்துவார் என்று சொன்னேன்”

- Advertisement -

“அப்படி நான் சொன்னதை அவர் ஃபைனலில் செய்து காட்டியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் இழந்த இந்தியா அழுத்தத்திற்குள் தள்ளப்பட்ட போது விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அது அவரால் போட்டியை எந்தளவுக்கு புரிந்து வைத்து தன்னுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்கும் ஆட்டத்தை விளையாட முடியும் என்பதை காட்டியது. ஆனால் ஆம் அது அவருக்கு எளிதாக இல்லை”

இதையும் படிங்க: எப்படியாச்சும் தோற்கணும்ன்னு நினச்ச அவங்க மனசுலயே இடம் பிடிச்சுட்டாரு.. இந்திய வீரரை பாராட்டிய ஏபிடி

“அன்றைய நாளில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய மெதுவான அரை சதத்தை அடித்தார். அப்படி கடினமாக வேலை செய்த அவர் 50 ரன்கள் கடந்ததும் வேகமாக ரன்கள் அடித்தார். அது தான் அவரிடமிருந்து அணிக்கு தேவைப்பட்டது. தனது கேரியர் முழுவதும் அவர் இப்படி சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தார் போல் விளையாடி அசத்தி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement