அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்து 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதியே இறுதிப்போட்டி முடிவடைந்தாலும் பாரபடாஸ் நகரில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்புவது தாமதமான நிலையில் தற்போது இந்திய அணியின் வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்து. பிரதமர் மோடியுடன் ஒரு சிறப்பு விருந்தில் கலந்து கொண்ட பின்னர் மும்பை வான்கடைய மைதானத்தில் ரசிகர்களுக்காக திறந்த வெளி பேருந்தில் வந்திருந்தனர்.
அப்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த வேளையில் இந்திய அணியின் வீரர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றியே இப்போதும் மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்காக சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு ரசிகர்கள் அனைவரும் இலவசமாக வரலாம் என்று அறிவிக்கப்பட்டதால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் இந்திய வீரர்கள் கோப்பையுடன் வருகை தந்து தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்சிக் பாண்டியாவை ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் கடுமையான கிண்டல், கேலி செய்த வேளையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹார்டிக் என்று அவரது பெயரை கோஷமிட்டு மகிழ்ச்சியில் ஆழத்தினர்.
இதையும் படிங்க : என்னா மனுஷன்யா.. டி20 உ.கோ வென்ற இந்திய அணியை பாராட்டிய தருணத்தில்.. மோடி செய்ததை கவனிச்சீங்களா
இதே மைதானத்தில் அவரது பெயரில் பெயரை கூறி ரசிகர்கள் கிண்டல் செய்த வேளையில் தற்போது மீண்டும் அவரது பெயரை கோஷமிட்டு ரசிகர்கள் பாராட்டிய வேளையில் பாண்டியாவும் அதனைக் கண்டு நிகழ்ந்து போனது குறிப்பிடத்தக்கது.



