தோனியை யார்தான் கண்ட்ரோல் பண்ணாங்க? கத்துக் கொடுத்தவருக்கு சவால் கொடுப்பது பற்றி.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 2வது போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழும் சென்னையும் மும்பையும் மோதும் இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தப் போட்டியில் தடை காரணமாக விளையாடாத ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் மும்பை அணியை வழி நடத்த உள்ளார்.

மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை தங்களது 6வது கோப்பை வெல்லும் பயணத்தை துவங்குகிறது. அந்த அணிக்கு இம்முறை ஜாம்பவான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அன்கேப்ட் பிளேயராக விளையாட உள்ளார். 43 வயதாகும் அவர் சமீபத்திய வருடங்களாக பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்குகிறார்.

- Advertisement -

அன்கேப்ட் பிளேயர் தோனி:

அந்த வாய்ப்பிலும் கடந்த வருடம் அதிரடியாக பறக்க விட்ட தோனி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்து வயதானாலும் தமது ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். இந்நிலையில் அன்கேப்ட் வீரராக இம்முறை களமிறங்கும் தோனியை கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? என்று மும்பை கேப்டன் சூரியகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கடந்த காலங்களில் யார் தான் தோனியை எளிதாக கட்டுப்படுத்தினார்கள்? என்று சூரியகுமார் புன்னகையுடன் பதிலளித்தார்.

மேலும் தோனியிடம் கேப்டன்ஷிப் பற்றி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக சூர்யகுமார் கூறியுள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக இந்தப் போட்டியில் விளையாடுவது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “யார் கட்டுப்படுத்துவது? அம்பயர்களா? (சிரிக்கிறார்). இத்தனை வருடங்களில் யாராவது தோனியை எளிதாக கட்டுப்படுத்த முடிந்ததா?”

- Advertisement -

சூரியகுமார் பாராட்டு:

“சென்னைக்கு நீங்கள் வரும் போது அவர் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வருவதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கும். அது எப்போதும் நல்ல விஷயம். அவரிடம் இருந்து நீங்கள் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறீர்கள். இப்போதும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் நாங்கள் பேசுவோம். எனவே தோனி மீண்டும் விளையாடுவதை பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது”

இதையும் படிங்க: 4 அணியிடம் 1000.. ஓப்பனிங் போட்டியிலேயே கிங் என்பதை காட்டிய கோலி.. யாருமே செய்யாத ஐபிஎல் சாதனை

“ஆனால் இம்முறை அவருக்கு எதிராக நான் கேப்டனாக செயல்பட உள்ளேன். அது நல்ல சவாலாக இருக்கும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எல் க்ளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. அந்தப் போட்டிக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement