- Advertisement -
ஆசிய கோப்பை

கேப்டனான அப்றம் அதுல தடுமாறும் சூரியகுமார் அசத்தலன்னா.. சுப்மன் கில் கேப்டனாகிடுவாரு.. எச்சரித்த ஜாபர்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை டி20 வடிவத்தில் நடைபெறும் அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு 30 வயதில் அறிமுகமான சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே விளையாடினார்.

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் எதிரணிகளை நாலாபுறமும் அடித்து நொறுக்கிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அதனாலேயே ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பலரும் பாராட்டினர். அந்த வகையில் இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த அவர் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

- Advertisement -

கேப்டனாக தடுமாற்றம்:

கேப்டனாக பொறுப்பேற்ற பின் சூரியகுமார் தலைமையில் இந்தியா வெற்றி நடையும் போட்டு வருகிறது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் பேட்டிங்கில் சூரியகுமார் பெரியளவில் ரன்கள் குவிக்க தடுமாறுகிறார். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் தடுமாற்றமாக விளையாடிய அவர் கேப்டனாக 14 இன்னிங்ஸில் 258 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் பாண்டியா தலைமையில் பேட்ஸ்மேனாக மட்டும் சுதந்திரமாக விளையாடிய சூரியகுமார் 2வது அதிக ரன்கள் அடித்து மிரட்டினார். எனவே சூரியகுமார் பேட்டிங்கில் அசத்தாவிட்டால் சுப்மன் கில் டி20 கேப்டனாகும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார். இது பற்றி ஜாபர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக சூரியகுமார் நம்பர்கள் கவலையளிக்கிறது.

- Advertisement -

ஜாபர் எச்சரிக்கை:

“அவர் ரன்கள் அடிக்காதது கவலைக்குரியது. சமீபத்திய சர்வதேச போட்டிகளில் பெரும்பாலான ரன்களை ஸ்கொயர், லெக் சைட் திசையில் அடித்த அவருடைய ஷாட் செலக்சன் சராசரியாக இல்லை. ஆனால் அதில் வேலை செய்த சூரியகுமார் ஐபிஎல் தொடரில் முற்றிலும் மாறுபட்ட வீரராக விளையாடியதைப் பார்த்தோம். அங்கே ஆஃப் சைட் திசையிலும் அடித்த அவர் அனைத்து புறங்களிலும் அடிக்கும் போது பவுலர்களால் எதுவும் செய்ய முடியாது”

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா கையில் அணிந்து இருக்கும் இந்த வாட்சின் விலை என்ன தெரியுமா? – தலை சுத்திடும்

“எனவே ஆபத்தான அவர் ஐபிஎல் போல தொடர்ந்து அசத்துவார் என்று நம்பலாம். அதனால் உங்களுடைய கேப்டன்ஷிப் பொறுப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு தொடரிலும் புதிய துணைக் கேப்டன்கள் வருகிறார்கள். ஆனாலும் அது சுப்மன் கில்லுக்கு அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் வரும் போது வாய்ப்பை ஏற்படுத்தலாம்” என்று கூறினார்.

- Advertisement -