- Advertisement -
ஆசிய கோப்பை

இந்தியாவை ஜெட்டில்மேன் இல்லன்னு சொன்ன பாக்.. ஓமன் அணிக்கு சூரியகுமார் கொடுத்த 2 நெகிழ்ச்சி பரிசு

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அப்போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 189 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56, அபிஷேக் 38, அக்சர் படேல் 26, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஓமன் முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 167/4 ரன்களை அடித்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜடிண்டர் சிங் 32, அமைர் கலீம் 64, ஹமத் மிர்ஸா 51 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

சூரியகுமாரின் 2 நெகிழ்ச்சி பரிசு:

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப், குல்தீப், ஹர்ஷித் ராணா தலா 1 விக்கெட் எடுத்தனர். அதையும் சேர்த்து 3 போட்டியில் 3 வெற்றிகளைப் பெற்று இந்தியா சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. முன்னதாக கடந்தப் போட்டியின முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணி கை கொடுக்காதது சர்ச்சையாக மாறியது.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் காஷ்மீரில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பாகிஸ்தான் அணியுடன் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கை குலுக்கவில்லை. ஆனால் அதற்கு நம்பர் ஒன் அணியாக இருந்து கொண்டு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளாத இந்தியாவின் உண்மையான முகமும் நிறமும் அம்பலமானதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

இந்தியா எப்போவும் ஜென்டில்மேன்:

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ஓமன் வீரர்களிடம் சூரியகுமார் தலைமையிலான அனைத்து இந்திய அணி வீரர்களும் கைகுலுக்கினார்கள். குறிப்பாக கேப்டன் சூரியகுமார் அனைத்து ஓமன் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மைதானத்தின் மையப்பகுதிக்கு அழைத்தார். அவர்கள் அனைவருக்கும் கை கொடுத்த சூரியகுமார் ஓமன் அணியினரை சுற்றி நிற்க வைத்து புகைப்படம் எடுத்து நினைவுப் பரிசை வழங்கினார்.

இதையும் படிங்க: 21 ரன்ஸ்.. போராடிய ஓமனை வீழ்த்திய இந்தியாவுக்காக.. அர்ஷ்தீப் சிங் 3 வருடத்தில் வரலாற்று சாதனை

அதைப் பார்த்து ஓமன் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்தியா போன்ற நம்பர் ஒன் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு ஓமனுக்கு அனைத்து நேரங்களிலும் கிடைப்பதில்லை. எனவே அந்த வாய்ப்பில் சூரியகுமாரிடம் நிறைய ஓமன் வீரர்கள் கிரிக்கெட்டை பற்றிய ஆலோசனைகள் கேட்டனர். அவர்கள் அனைவருக்கும் சூரியகுமார் பொறுமையாக தேவையான ஆலோசனைகளை கொடுத்தார். அதனால் இந்தியா ஜென்டில்மேன் இல்லை என்று விமர்சித்த பாகிஸ்தானியர்களுக்கு சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி நேற்றைய போட்டியில் பதிலடி கொடுத்தது என்றால் மிகையாகாது.

- Advertisement -