ஐபிஎல் 2024 : சூரியகுமார் யாதவ் விளையாடுவதில் சிக்கல்.. மும்பை அணிக்கு கிடைத்த சோகமான தகவல்

Suryakumar 2
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் அவர் காயமடைந்து வெளியேறினார்.

குறிப்பாக கேப்டனாக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் ஃபீல்டிங் செய்த போது கணுக்காலில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக ஜனவரி மாதம் சொந்த மண்ணில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாத அவர் வெளிநாட்டுக்குச் சென்று தன்னுடைய காயத்துக்கு தேவையான அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது குணமடைந்து வருகிறார்.

- Advertisement -

சூரியகுமார் சந்தேகம்:
இருப்பினும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 2 மாதங்கள் முடிந்து விட்டதால் ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் முழுமையாக குணமடைந்து விட்டார் என்று என்சிஏ சான்றிதழ் வழங்கவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இன்னும் முழுமையாக ஃபிட்டாகாத சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வருகிறது.

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பிடிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் முழுமையாக குணமடையும் வழியில் இருக்கிறார். அதனால் அவர் ஐபிஎல் தொடரிலேயே மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் ஆரம்பக்கட்ட போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான அனுமதியை எம்சிஏ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழு இன்னும் அவருக்கு வழங்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை”

- Advertisement -

“எனவே குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடுவது உறுதியாகவில்லை. மும்பை தங்களுடைய முதல் போட்டியில் விளையாடுவதற்கு இன்னும் 12 நாட்கள் இருக்கிறது. எனவே முதல் போட்டிக்கான நேரத்திற்கு அவர் ஃபிட்டாவதற்கான பந்தயம் துவங்கியுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: நான் சொல்றேன்.. அவர் இல்லனாலும் குஜராத் அணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல – பிராட் ஹாக் கருத்து

இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது சந்தேகமாக பார்க்கப்படுவது மும்பை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த உள்ளது.

Advertisement