நான் சொல்றேன்.. அவர் இல்லனாலும் குஜராத் அணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் 10 தினங்களில் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக துவங்க உள்ளது. மார்ச் 22-ஆம் தேதி துவங்கவுள்ள இந்த ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மினி ஏலத்தில் பல்வேறு அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியது.

அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்திற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹார்டிக் பாண்டியாவை விலைக்கு வாங்கி நடப்பு சீசனுக்கான கேப்டனாகவும் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை ஹார்டிக் பாண்டியா வழிநடத்த இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியா அந்த அணியில் இருந்து விலகியதால் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பாண்டியா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது எந்த விதத்திலும் குஜராத் அணியை பாதிக்காது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் வெளிப்படையான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவின் இழப்பு பெரிய இழப்பெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ஒரு தரமான ஆல்ரவுண்டர் என்பது சரிதான். ஆனால் அவரது இடத்தை நிரப்பும் அளவிற்கு குஜராத் அணி சிறப்பாகவே உள்ளது. அந்த அணியில் நல்ல பவுலிங் உள்ளது. அதோடு ஹார்டிக் பாண்டியா குஜராத் அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வந்தார்.

- Advertisement -

ஆனால் தற்போதைய குஜராத் அணியில் அந்த இடத்திற்கு நிறைய பேர் மாற்று வீரர்கள் உள்ளனர். எனவே என்னை பொறுத்தவரை குஜராத் அணி பாண்டியா இல்லை என்றாலும் முழு பலமாக தான் உள்ளது என்று கூறுவேன். அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பாண்டியா பின் வரிசையில் களமிறங்கி விளையாடும் வீரராக தான் இருப்பார். அதோடு பந்துவீச்சிலும் அவர் கை கொடுப்பார் என்பதனால் மும்பை அணிக்கு அது ஒரு சாதகமான விடயம் தான்.

இதையும் படிங்க : வெறித்தனமான கோலியுடன் கம்பேர் பண்ணாதீங்க.. ரோஹித் அந்த ஸ்டைல் வெச்சுருக்காரு.. கேப்டன்ஷிப் பற்றி நாசர் ஹுசைன்

பாண்டியாவிற்கு பின் வரிசையில் களமிறங்கி விளையாடுவது தான் சரியாகப் பொருந்தும் என்றும் பிராட் ஹாக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த சீசனில் பாண்டியாவிற்கு கீழ் ரோஹித் சர்மா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement