வெறித்தனமான கோலியுடன் கம்பேர் பண்ணாதீங்க.. ரோஹித் அந்த ஸ்டைல் வெச்சுருக்காரு.. கேப்டன்ஷிப் பற்றி நாசர் ஹுசைன்

Nasser Hussain 7
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக அதிரடியாக விளையாடி சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விக்கெட்டுகள் விழாத சமயத்தில் விராட் கோலி போல ரோகித் சர்மா ஆக்ரோஷமாக செயல்படவில்லை என்று மைக்கேல் வாகன், மான்டி பனேசர் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர். அதனால் ஒருவேளை விராட் கோலி இருந்திருந்தால் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:
ஆனால் அதன் பின் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை பயன்படுத்தி சிறப்பாக வழி நடத்திய ரோகித் சர்மா இந்தியாவின் வெற்றியில் கேப்டனாக முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆக்ரோசமாக செயல்படக்கூடிய விராட் கோலியுடன் ரோஹித் சர்மாவை ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் தவறுகள் செய்தாலும் அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு கேப்டன்ஷிப் செய்யும் ஸ்டைலை ரோகித் சர்மா கொண்டிருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் ரோகித் சர்மா வெற்றியை எதிரணி பக்கம் நகரை விட்டு பின்தங்கிய வீரராக செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். அவருடைய பேட்டிங்கில் நிறைய திறமை, எண்ணங்கள் மற்றும் அபாரம் இருக்கிறது”

- Advertisement -

“அப்படிப்பட்ட அவர் கேப்டனாக இம்முறை சிறப்பான தொடரை கொண்டார் என்று நான் நினைக்கிறேன். பல்வேறு சூழ்நிலைகளுக்கு உட்பட்டு அதைப் பார்த்து கற்றுக்கொண்டு தனது ஸ்டைலில் கேப்டன்ஷிப் செய்வதாக ரோஹித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக சொன்னார். இத்தொடரின் துவக்கத்தில் அவர் அஸ்வினை ஆரம்பத்திலேயே பயன்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்தி அஸ்வின் வருவதற்கு முன்பே பென் டக்கெட் 60 – 70 ரன்கள் அடித்தார். அந்த விஷயத்தில் ரோகித் சர்மா சரியாக செய்யவில்லை”

இதையும் படிங்க: சாரி தம்பி.. சிறுவனிடம் மன்னிப்பு கேட்டு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரிங்கு சிங்.. நெகிழ்ச்சி பின்னணி

“எனவே விராட் கோலியுடன் சேர்த்து ரோகித் சர்மாவை குழப்ப வேண்டாம். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு நரகத்தை காண்பிப்போம் என்று இந்திய வீரர்கள் சந்திப்பில் விராட் கோலி சொன்னார். ஆனால் ரோகித் சர்மா அது போன்ற நபர் கிடையாது. அவர் தனக்குள் மட்டுமே நெருப்பை வைத்துள்ளார். ராகுல் டிராவிட்டும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் மனம் உடைந்திருப்பார். அதற்காக அவர் இரக்கமற்றவராக தன்னை காட்டவில்லை. இந்த தொடர் முன்னேறும் போது அதற்கான அறிகுறிகளை கண்டோம்” என்று கூறினார்.

Advertisement