சாரி தம்பி.. சிறுவனிடம் மன்னிப்பு கேட்டு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரிங்கு சிங்.. நெகிழ்ச்சி பின்னணி

Rinku Singh
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22 முதல் கோலாகலமாக துவங்கி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் சென்னை உட்பட அனைத்து அணிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து தங்களுடைய 3வது கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தயாராகி வருகிறது.

இம்முறை அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக விளையாட உள்ளதும் 2012, 2014இல் கோப்பைகளை வென்றுக் கொடுத்த முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் ஆலோசகராக வந்துள்ளதும் பலமாக பார்க்கப்படுகிறது. அதை விட இளம் வீரர் ரிங்கு சிங் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி நல்ல ஃபார்மில் இருப்பது கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைய உள்ளது.

- Advertisement -

சாரி தம்பி:
ஏனெனில் கடந்த வருடம் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அயர்லாந்து, 2023 விளையாட்டு போட்டிகள், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் மீண்டும் கொல்கத்தா அணிக்காக 2024 ஐபிஎல் தொடரில் அசத்துவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அந்த பயிற்சியில் ஒரு பந்தை ரிங்கு சிங் அதிரடியான சிக்ஸராக பறக்க விட்டார். துரதிஷ்டவசமாக அந்த பந்து அங்கே மற்றொரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுடைய தலையில் பட்டது.

- Advertisement -

அதனால் பதறிப் போன ரிங்கு அந்த சிறுவனை நேராக சென்று பார்த்து. “அதிகம் அடிபட்டு விட்டதா? எங்கே பட்டது. சாரி தம்பி” என்று சொல்லிக்கொண்டே பந்து பட்ட இடத்தை கையால் தொட்டுப் பார்த்து நலம் விசாரித்தார். அதைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தன்னுடைய தலையில் இருந்த தொப்பியை பரிசாக வழங்கி சமாதானப்படுத்தினார்.

இதையும் படிங்க: 100 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக டிராவிட் சொன்ன அந்த வார்த்தைகளை மறக்க முடியாது – அஷ்வின் நெகிழ்ச்சி

மேலும் அதில் ஃஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த ரிங்கு சிங் அந்த சிறுவன் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தினார். மொத்தத்தில் தன்னால் காயத்தை சந்தித்த சிறுவனை நலம் விசாரித்த ரிங்கு சிங் கையொப்பமிட்ட தொப்பியை பரிசாக கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா தங்களுடைய முதல் போட்டியில் மார்ச் 23ஆம் தேதி ஹைதராபாத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement