100 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக டிராவிட் சொன்ன அந்த வார்த்தைகளை மறக்க முடியாது – அஷ்வின் நெகிழ்ச்சி

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தரம்சாலா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100-வது போட்டியில் விளையாடி இந்திய அணி சார்பாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது இந்திய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். இப்படி 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வேளையில் போட்டிக்கு முன்னதாக அவருக்கு நூறாவது போட்டிக்கான ஸ்பெஷல் கேப்பும் கொடுத்து கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது நூறாவது போட்டியில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : எனது நூறாவது டெஸ்ட் போட்டிற்கான வரவேற்பும் வாழ்த்தும் இப்படி இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் விளையாடுவேன். ஏனெனில் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

அந்த வகையில் நான் 100-ஆவது போட்டிக்காக விளையாடும் போது எனக்கு வந்த வாழ்த்துக்களும், ஆதரவுகளும் என்னை நெகிழ வைத்துவிட்டன. மேலும் மைதானத்திற்கு பலரும் என்னை நேரில் பார்க்க வந்ததாக கூறியிருந்தார்கள். எனக்கு மட்டும் இல்லாமல் எனது குடும்பத்திற்கும் இந்த போட்டியின் மூலம் கூடுதல் மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் டிராவிட் 100-வது டெஸ்ட் கேப்பை வழங்கிய பின்னர் குடுத்த ஸ்பீச்சை என்னால் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க : சேர்ப்பு வாங்க கூட காசு இல்லாம இருந்த எனக்கு அவருதான் ஷூ வாங்கி குடுத்தாரு – ஷர்துல் தாகூர் உருக்கம்

ஏனென்றால் 2008-ஆம் ஆண்டு நான் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்பட்டாலும் 2014 வரை தெருவில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அதிலும் குறிப்பாக எங்களது ஏரியாவை சேர்ந்த ஒரு அசோசியேஷன் அணியையும் நாங்கள் வைத்திருந்தோம். அதன் சார்பாக கிரிக்கெட் தொடர்களையும் நடத்தி இருக்கிறோம். அவற்றையெல்லாம் ராகுல் டிராவிட் மறக்காமல் குறிப்பிட்டு சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வீரராக நான் ராகுல் டிராவிடுடன் விளையாடி இருக்கிறேன். தற்போது அவர் பயிற்சியாளராக வேறு மாதிரியான உணர்வை கொடுக்கிறார். அவர் எனக்கு அண்ணன் போல உணர வைத்து விட்டார் என அஸ்வின் நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement