சூர்யகுமார் கம்பேக்கில் ட்விஸ்ட் வைக்கும் பிசிசியை.. இந்தியாவின் நலன் கருதி முக்கிய முடிவு.. மும்பைக்கு பின்னடைவு

Suryakumar Yadav MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக 277 ரன்கள் வாரி வழங்கிய மும்பை மோசமான சாதனையை படைத்து தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் 31 ரன்கள் வித்யாசத்தில் தோற்ற மும்பைக்கு சூரியகுமார் யாதவ் இல்லாதது பெரிய பின்னடைவாக அமைந்தது என்றே சொல்லலாம்.

ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் பெரும்பாலான தருணங்களில் எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கக் கூடியவர். இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் சந்தித்த காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதனால் முதலிரண்டு போட்டிகளில் மட்டும் சூரியகுமார் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியானது.

- Advertisement -

பிசிசிஐ முடிவு:
ஆனால் தற்போது 2 போட்டிகள் நிறைவு பெற்றதால் 3வது போட்டியிலாவது சூரியகுமார் விளையாட வருவாரா என்ற எதிர்பார்ப்புடன் மும்பை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக சூரியகுமார் முழுமையாக குணமடைந்து கண்டிப்பாக வேண்டும் என்று பிசிசிஐ விரும்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதனால் முழுமையாக குணமடையாமல் சூரியகுமாரை அவசரமாக ஐபிஎல் தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதன் காரணத்தால் இன்னும் சில போட்டிகளில் மும்பைக்காக அவர் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பிடிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “சூர்யா நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் மும்பைக்காக விளையாட வருவார்”

- Advertisement -

“இருப்பினும் முதல் 2 போட்டிகளில் விளையாடாத அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட மாட்டார். பிசிசிஐ பொறுத்த வரை அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது முக்கியமாகும். அவர் மும்பைக்காக விளையாடுவார். ஆனால் அதற்காக பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவரை அவசரப்படுத்த முடியாது” என்று கூறினார். இதனால் சூரியகுமார் குறைந்தபட்சம் இன்னும் 2 – 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: முதல் மேட்ச்லயே ட்விஸ்ட் வெச்சுட்டாங்க.. இந்தியாவிடம் அனுபவமில்ல ஆனா.. 2024 – 25 ஆஸி தொடர் பற்றி அஸ்வின்

ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து திணறி வரும் மும்பைக்கு அவர் அடுத்த 2 போட்டிகளில் விளையாடாமல் போனால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் இந்தியாவுக்காக சூரியகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நினைக்கும் பிசிசிஐ முடிவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement