- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2026 டி20 உ.கோ தொடரிலும் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமாரை கேப்டனாக்க விரும்பும் பிசிசிஐ.. காரணம் இதோ

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கே 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் விளையாட மாட்டார்கள். அது போன்ற சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஏனெனில் அவர் தான் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் துணைக் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

முந்தும் சூரியகுமார்:
அத்துடன் 2022க்குப்பின் நிறைய டி20 தொடர்களில் ரோஹித் இல்லாத போது ஹர்திக் பாண்டியா தான் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். அதே சமயம் 2023 ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் தலைமையில் இந்தியா வெற்றி கண்டது. மறுபுறம் ருதுராஜ், சுப்மன் கில் ஆகியோர் ஜூனியர்களாக உள்ளனர்.

எனவே ரோஹித்துக்குப் பின் அடுத்த டி20 கேப்டனாகும் போட்டியில் பாண்டியா – சூரியகுமார் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இலங்கை மட்டுமின்றி அடுத்த 2026 டி20 உலகக் கோப்பைக்கு சூரியகுமாரை இப்போதிலிருந்தே கேப்டனாக வளர்க்க புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்தில் பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருந்தார். எனவே ரோஹித்துக்கு பின் இயற்கையாக அவரே அடுத்த கேப்டனாக வேண்டும். ஆனால் தேர்வுக் குழுவினர் மற்றும் கம்பீர் ஆகியோர் சூரியகுமாரை விரும்புகின்றனர். ஏனெனில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்தியா விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை”

இதையும் படிங்க: அந்த 2 ஜாம்பவான்கள் மாதிரி.. விராட், ரோஹித்துக்கு மாற்று வீரர்களே கிடையாது.. கபில் தேவ் பாராட்டு

“மறுபுறம் தேர்வுக்குழுவினர் 2026 டி20 உலகக்கோப்பையை மையமாக வைத்து நிலையான கேப்டனை உருவாக்க விரும்புகின்றனர். இது பற்றி பாண்டியா மற்றும் சூரியகுமார் ஆகிய இருவரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வுக்குழு சொல்லும் நிபந்தனைகளை ஏற்பது பாண்டியாவின் கையில் உள்ளது. இது பற்றிய இறுதி முடிவு இலங்கை தொடரை தேர்வுக் செய்யும் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும்” என்று கூறினார்.

- Advertisement -