ஏபிடி, கிறிஸ் கெயிலையே மிஞ்சிட்டாரு, இவரை மாதிரி டி20 விளையாட யாராலும் முடியாது – பாராட்டிய டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியுள்ளது. குறிப்பாக ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 228/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தன்னுடைய 3வது சதமடித்து 7 பௌண்டரி 9 சிக்சருடன் 112* (51) ரன்கள் விளாசினார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

அதை துரத்திய இலங்கை இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சனாக்கா மற்றும் குசால் மெண்டிஸ் தலா 23 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்களை எடுத்தார். அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி இந்தியாவின் வெற்றிக்கு சந்தேகமின்றி முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

புதிய யூனிவர்சல் பாஸ்:
சொல்லப்போனால் நேற்று அவர் ஆட்டநாயகன் விருதை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தமக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் நாலாபுறமும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்ட அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். அதை விட முகத்துக்கு நேராக வந்த ஃபுல் டாஸ் பந்தில் கீழே விழுந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் அவர் அடித்த சிக்சரையும் பிஹய்ன்ட் தி விக்கெட் திசையில் விழுந்து விழுந்து பறக்க விட்ட சிக்ஸர்களையும் பார்த்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பேசுவதற்கு வார்த்தைகளின்றி மெய்மறந்து போனார்கள்.

AB DE villiers Suryakumar Yadav

அந்த வகையில் தன்னை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று நிரூபித்த அவரை இன்னும் கூட சில முன்னாள் வீரர்கள் ஏபிடி வில்லியர்ஸ் உடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத புது புது ஷாட்டுகளை மைதானத்தில் நாலாபுறங்களிலும் உருண்டு பிரண்டு விழுந்து அடிக்கும் சூரியகுமார் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை மிஞ்சி டி20 கிரிக்கெட்டின் புதிய யுனிவர்சல் பாஸாக உருவெடுத்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா வெளிப்படையாக பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகின் புதிய யுனிவர்சல் பாஸ் சூரியகுமார் – அவர் மிருகம். சூரியகுமார் போன்ற வீரர் வாழ்நாளில் ஒரு முறை வருவார் என்று நான் சொல்வதை தவிர இந்த பையனை பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும். இன்று அவர் விளையாடிய 51 பந்தில் 112 ரன்கள் இன்னிங்ஸ் யாராலும் பிரதிபலிக்க முடியாது. நீங்கள் ஏபிடி, கிறிஸ் கெயில் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் சூர்யாவுக்கு முன் வெளிர் நிறமாக இருக்கிறார்கள். அவர் ஏற்கனவே அவர்களை முறியடித்து டி20 கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார். இதே மாதிரி விளையாடினால் உலகில் அவரை எந்த பவுலராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு முன் இருந்த கிறிஸ் கெயில், ஏபிடி ஆகியோர் இருந்தனர்”

Kaneria

“ஆனால் அவர்கள் சென்று விட்டார்கள். தற்போது சூர்யாவுக்கு அருகில் யாருமே வர முடியாது. சொல்லப்போனால் சூரியகுமார் அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டார். அவரை வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், விராட் கோலி மிகவும் ரசிக்கிறார்கள். குறிப்பாக விராட் கோலி எப்போதும் சூர்யாவை புகழ்கிறார். அவருடன் விராட் கோலி விளையாடும் போது இவர் எப்படி இந்த ஷாட்களை அடிக்கிறார் என்று வியந்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். என்னைப் பொறுத்த வரை சூரியகுமார் முழுமையான 360 டிகிரி பேட்ஸ்மேன். அவரை போன்ற ஒருவர் சில தசாப்தங்களுக்கு ஒரு முறை தான் வருவார்கள். அதே சமயம் சூரியகுமார் போல யாருமே இருக்க முடியாது. அவர் முற்றிலும் மாறுபட்ட பயமற்ற கிரிக்கெட் வீரர்”

இதையும் படிங்க: வீடியோ : பாட்ஷா பாய் போல கையில் முத்தமிட்ட சஹால் – 6 மாதத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் புதிய உலக சாதனை படைத்த சூரியகுமார்

“உலக கிரிக்கெட்டில் தன்னுடைய பெயரை அவர் பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளது அபாரமானது. அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கிறார். ஒருவேளை நீங்கள் அவருடைய முகத்தில் பந்து வீசினாலும் அவரால் பேடல் ஸ்கூப் சாட் அடிக்க முடியும். எனவே அவர் பேட்டிங் செய்யும் போது பவுலர்கள் எப்போதுமே அழுத்தத்தில் இருப்பார்கள்” என்று பாராட்டினார். முன்னதாக ஏற்கனவே 360 பேட்ஸ்மேன் இடத்தை நெருங்கி விட்டதாக தெரிவித்த ஏபிடி வில்லியர்ஸ் விரைவில் என்னையும் நீங்கள் மிஞ்சப் போகிறீர்கள் என்று சூரியகுமாரை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement